Pookkalae Sattru Oyivedungal Lyrics in Tamil
ஆண்: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
ஆண்: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
ஆண்: ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஆண்: ஹையோ என திகைக்கும்
ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
ஆண்: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
பெண்: தின தக்கிடுதானே நா
தின தக்கிடுதானே நா
தின தக்கிடுதானே நா
தி திரேரேநா ஆ ஆ ஆ
பெண்: தின தக்கிடுதானே நா
திரேரேநா ஆ தாரே நா நா
நீ நீ ஆ ஆ
பெண்: இந்த உலகில் உனைவெல்ல ஒருவன் இல்லை
உந்தன் அசைவுகளில் யாவிலும் ஐ
விழி அழகை கடந்து உன் இதயம் நுழைந்து
என் ஐன்புலன் உணர்ந்திடும் ஐ
ஆண்: இவன் பயத்தை அணைக்க
அவள் இவனை அணைக்க
அவள் செய்கையில் பெய்வது ஐ
அவள் விழியின் கனிவில்
எந்த உலகம் பணியும்
சிறு நோயளவு ஐயமில்லை
பெண்: என் கைகளை கோர்த்திடு ஐ விரலை
இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை
ஆண்: அவள் இதழ்களை நுகர்ந்துவிட
பாதை நெடுக
பெண்: தவம் புரியும்
ஆண்: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
ஆண்: ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஆண்: ஹையோ என திகைக்கும்
ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
பெண்: நீர்வீழ்ச்சி போலே நின்றவன்
நான் நீந்த ஒரு ஓடை ஆனாய்
வான் முட்டும் மலையை போன்றவன்
நான் ஆட ஒரு மேடை ஆனாய்
ஆண்: என்னுள்ளே என்னை கண்டவள் யாரென்று
எனை காணச்செய்தாள்
கேளாமல் நெஞ்சை கொய்தவள் சிற்பம் செய்து
கையில் தந்தாள்
பெண்: யுகம் யுகம் காண
முகம் இது போதும்
புகலிடம் என்றே உந்தன்
நெஞ்சம் மட்டும் போதும்
ஆண்: மறு உயிர் தந்தாள்
நிமிர்ந்திடச் செய்தாள்
நகர்ந்திடும் பாதை எங்கும்
வாசம் வீச வந்தாளே
ஆண்: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
ஆண்: ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
பெண்: ஹே ஐ என்றால்
அது தலைவன் என்றால்
அந்த ஐகளில் ஐ அவன் நீயா
பெண்: ஹையோ என திகைக்கும்
ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
ஆண்: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்