ஒரு முகமோ

Music: Harris Jayaraj
Singers: Krish and Naresh Iyer

Oru Mugamo Lyrics in Tamil

ஆண்: ஒரு முகமோ இரு முகமோ
முழுமுகமும் கலவரமோ
பயமறியாது இவன் தேசமோ

ஆண்: இவன் விழிகள் குறி தானோ
கண்ணசைவில் கவர்வானோ
வலியறியாது இவன் தேகமோ

ஆண்: ஒரு முகமோ இரு முகமோ
முழுமுகமும் கலவரமோ
பயமறியாது இவன் தேசமோ

ஆண்: இவன் விழிகள் குறி தானோ
கண்ணசைவில் கவர்வானோ
வலியறியாது இவன் தேகமோ

ஆண்: நொடியில் நொடியில் முடிவெடுப்பான்
இடியின் மடியில் தினம் படுப்பான்
அடியில் வெடியில் உயிரெடுப்பான்
நிழல் போல் இருப்பான்

ஆண்: எதிரும் புதிரும் போல் இருப்பான்
அதிரும் செயலில் பூப்பறிப்பான்
உதிரம் உயிரில் கணக்கெடுப்பான்
நெருப்பாய் நடப்பான்

ஆண்: உலகம் அதிகாலை சோம்பல் முறிக்கும்
ஆனால் இவன் கையில் தோட்டா தெறிக்கும்
ஒரு சமயம் இவன் செயல் நியாயம்
மறு சமயம் இவன் செயல் மாயம்
ஜக ஜா ஜா ஜாம் ஜஜாம் ஜகிட ஜகிட ஜகிட ரகலக

ஆண் குழு: ஒரு முகமோ இரு முகமோ
முழுமுகமும் கலவரமோ
பயமறியாது இவன் தேசமோ

ஆண் குழு: இவன் விழிகள் குறி தானோ
கண்ணசைவில் கவர்வானோ
வலியறியாது இவன் தேகமோ

ஆண்: தெரிக்கும் தெரிக்கும் இசை பிடிக்கும்
சிரிக்கும் சிரிக்கும் மனம் பிடிக்கும்
வெடிக்கும் வெடிக்கும் வெடி பிடிக்கும்
இரவின் தலைவா ஹேய்

ஆண்: எதையும் செய்வான் உடனுக்குடன்
தேநீர் விருந்து ஆபத்துடன்
செல்வான் வெல்வான் வேகத்துடன்
இயங்கும் இளைஞன்

ஆண்: ரோஜாக்கள் தோற்கும் இவனின் முகமே
உள் சென்று பார்த்தால் உறுமும் குணமே
ஆண் குழு: அட போனால் போகாட்டும் என்பான்
தினமும் பகையையே உணவென உண்பான்
ஜக ஜக ஜகஜோம் ஜஜோம்ஜம்
ஜகஜோம் ஜஜோம்ஜம் ஜகஜோம் ஜகிட ஜகிட ஜகிட ஜக ஜக

பெண் குழு: ஒரு முகமோ இரு முகமோ
முழுமுகமும் கலவரமோ
பயமறியாது இவன் தேசமோ

பெண் குழு:
 இவன் விழிகள் குறி தானோ
கண்ணசைவில் கவர்வானோ
வலியறியாது இவன் தேகமோ

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team