சிறு பார்வையாலே

Siru Paaravaiyaale Lyrics in Tamil
Music: Harris Jayaraj
Singers: Karthik and Harini

Siru Paaravaiyaale Lyrics in Tamil

ஆண்: சிறு பார்வையாலே
கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக் கொள்ள
வேண்டும் உந்தன் மடியே மடியே

ஆண்: சிறு பார்வையாலே
கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக் கொள்ள
வேண்டும் உந்தன் மடியே மடியே

ஆண்: நீ தூரப் பச்சை
என் நெடுநாள் இச்சை
ஒரு மாறு வேடம் பூண்டு வந்த
மல்லிப்பூவே முல்லைத் தீவே

பெண்: தும்பி ஆக மாறி
உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை
தொட்டுப் பார்த்து முத்தம் இடவா
தூங்கும் உன்னை
தொட்டுப் பார்த்து முத்தம் இடவா

ஆண்: சிறு பார்வையாலே
கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக் கொள்ள
வேண்டும் உந்தன் மடியே மடியே

பெண் குழு: விழியே ஓ கைபா கைபா
மடியே ஓ கைபா கைபா
விழியே ஓ கைபா கைபா
மடியே ஓ கைபா கைபா

ஆண்: உதய்க்கும் மலைகளிலே
மிதக்கும் படகெனவே
மறைக்கும் முகிலிடையே
சிரிக்கும் முழு நிலவே

பெண்: அடக்கம் தடுக்கிறதே
அதட்டிப் பிடிக்கிறதே
நெருங்கி வருகையிலே
நொறுங்கி உடைகிறதே

ஆண்: உன் நெஞ்சில் இட்டு
என்னை தாலாட்ட
என் கர்வம் எட்டிப்
பார்க்கும் வாலாட்ட

ஆண்: நீ மண்ணில் உள்ள
பெண்ணே இல்லை
என்னைத் தேடி வந்தாய்
பாராட்ட

பெண்: சிறு பார்வையாலே
கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக் கொள்ள
வேண்டும் உந்தன் மடியே மடியே

ஆண்: நீ தூரப் பச்சை
என் நெடுநாள் இச்சை
ஒரு மாறு வேடம் பூண்டு வந்த
மல்லிப்பூவே முல்லைத் தீவே

ஆண்: சிலிர்க்கும் இலைகளிலே
துளிர்க்கும் முதல் இலையே
இனிக்கும் கரும்பினிலே
கிடைக்கும் முதல் சுவையே

பெண்: விழுந்தேன் இரவினிலே
எழுந்தேன் கனவினிலே
கனவில் நீ இருந்தாய்
மறந்தேன் வெளிவரவே

ஆண்: ஒரு ஜோடி தென்றல்
போகுது முன்னாலே
அதை கால்கள் என்று
பொய்கள் சொன்னாயே

பெண்: நீ கொஞ்சும் போது
பல்லும் நஞ்சு
ஆனால்கூட அள்ளி உண்பேனே

ஆண்: சிறு பார்வையாலே
கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக் கொள்ள
வேண்டும் உந்தன் மடியே மடியே

ஆண்: நீ தூரப் பச்சை
என் நெடுநாள் இச்சை
ஒரு மாறு வேடம் பூண்டு
வந்த மல்லிப்பூவே
முல்லைத் தீவே

பெண்: தும்பி ஆக மாறி
உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டுப் பார்த்து
முத்தம் இடவா
தூங்கும் உன்னை தொட்டுப் பார்த்து
முத்தம் இடவா

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team