ரகசிய கனவுகள்

Music: Harris Jayaraj
Singers: Hariharan and Madhushree
Lyricist: Yugabharathi(யுகபாரதி)

Ragasiya Kanavugal Lyrics in Tamil

பெண்: ரகசிய கனவுகள் ஜல் ஜல்
என் இமைகளை கழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில் ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது செல் செல்

ஆண்: முதல் பிழை போல் மனதினிலே
விழுந்தது உனதுருவம்
ஓ உதடுகளால் உனை படிப்பேன்
இருந்திடு அரை நிமிடம்

ஆண்: தொலைவது போல் தொலைவதுதான்
உலகில் உலகில் புனிதம்

பெண் குழு: இறகே இறகே மயிலிறகே
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற சுகம் சுகமே
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே

பெண் குழு: இறகே இறகே மயிலிறகே
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற சுகம் சுகமே
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே

பெண்: மறுபடி ஒருமுறை பிறந்தேனே
விரல் தொட புருவமும் சிவந்தேனே
ஓ இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ

ஆண்: சுடும் தனிமையை உணர்கிற
மரநிழல் போல எனை சூட
நரம்புகளோடு குறும்புகள் நாளும் எழுதிய கணக்கு
எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு

பெண்: ரகசிய கனவுகள் ஜல் ஜல்
என் இமைகளை கழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில் ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது செல் செல்

ஆண்: உயிரணு முழுவதும் உனை பேச
உனை பேச
இமை தொடும் நினைவுகள் அனல் வீச
அனல் வீச

ஆண்: ஓ நினைச்சாலே சிவப்பாகும்
மருதாணித் தோட்டம் நீ
தலைவைத்து நான் தூங்கும்
தலகாணி கூச்சம் நீ

பெண்: எனதிரவினில் கசிகிற நிலா ஒளி நீயே படர்வாயே
நெருங்குவதாலே நொறுங்கிவிடாதோ இருபது வருடம்
ஓ தவறுகளாலே தொடுகிற நீ ஓா் அழகிய மிருகம்

ஆண்: ரகசிய கனவுகள் ஜல் ஜல்
என் இமைகளை கழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில் ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது செல் செல்

பெண்: குயிலினமே குயிலினமே
எனக்கொரு சிறகு கொடு
முகிலினமே முகிலினமே
முகவரி எழுதிக் கொடு
அவனிடமே அவனிடமே எனது கனவை அனுப்பு

பெண் குழு: இறகே இறகே மயிலிறகே
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற சுகம் சுகமே
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே

பெண் குழு: இறகே இறகே மயிலிறகே
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற சுகம் சுகமே
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே

பெண் குழு: இறகே இறகே மயிலிறகே
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற சுகம் சுகமே
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team