முதல் மழை

Music: Harris Jayaraj
Singers: Hariharan, Mahathi and R. Prasanna
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)

Mudhal Mazhai Lyrics in Tamil

பெண்: மெகோ மெகோ மெகோ
லாகி மாகி மா
மெகோ மெகோ மெகோ
பாகி லாகி மா
ஹேய் ஹேய் ஹேய் லோ
மேஹி ரோஹிரோனா
மேஹி ரோஹிரோனா

ஆண்: முதல் மழை என்னை நனைத்ததே
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஓ இதமாய் மிதந்ததே

பெண்: முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் இதயமாய் மிதந்ததேயே

பெண்: மெகோ மெகோ மெகோ
லாகி மாகி மா
மெகோ மெகோ மெகோ
பாகி லாகி மா
ஹேய் ஹேய் ஹேய் லோ
மேஹி ரோஹிரோனா
மேஹி ரோஹிரோனா

ஆண்: கனவோடு தானடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னை படம் எடுத்தேன்
என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்

பெண்: எதுவும் புரியா புது கவிதை
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்
கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடுதான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்

ஆண்: முதல் மழை என்னை நனைத்ததே
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஓ இதமாய் மிதந்ததே

பெண்: ஓர்நாள் உன்னை நானும் காணாவிட்டால்
என் வாழ்வில் அந்த நாளே இல்லை
ஓர்நாள் உன்னை நானும் பார்த்தேவிட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை

ஆண்: இரவும் பகலும் ஒரு மயக்கம்
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்
உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்

ஆண்: பெயரே தெரியாத பறவை அழைத்ததே
இதயமும் ஓ இதமாய் மிதந்ததே

பெண்: மெகோ மெகோ மெகோ
லாகி மாகி மா
மெகோ மெகோ மெகோ
பாகி லாகி மா
ஹேய் ஹேய் ஹேய் லோ
மேஹி ரோஹிரோனா

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team