மலையோரம் வீசும் காத்து

Malaiyoram Veesum Kaathu Lyrics in Tamil
Movie: Paadu Nilave(பாடு நிலாவே)
Music: Ilaiyaraaja
Singer: S. P. Balasubrahmanyam
Lyricist: Vaali

Malaiyoram Veesum Kaathu Lyrics in Tamil

ஆண்: மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

ஆண்: மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

ஆண்: ஆராரோ பாடினாலும்
ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த
பாட்டு தானம்மா

ஆண்: மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

ஆண்: வான் பறந்த தேன்சிட்டு
நான் புடிக்க வாராதா
கள்ளிருக்கும் ரோசாப்பூ
கைகலக்க கூடாதா

ஆண்: ராபொழுது ஆனா
உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா
தொட ஆகாதா ஆணா

ஆண்: உள் மூச்சு வாங்கினேனே
முள்மீது தூங்கினேனே
இல்லாத பாரம் எல்லாம்
நெஞ்சோடு தாங்கினேனே
நிலாவ நாளும் தேடும் வானம் நான்

ஆண்: மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

ஆண்: குத்தாலத்து தேனருவி
சித்தாடை தான் கட்டாதா
சித்தாடைய கட்டி எழ
கையில் வந்து கிட்டாதா

ஆண்: ஆத்தோரம் நாண
பூங்காத்தோடு ஆட
ஆவாரம் பூவில்
அது தேவாரம் பாட

ஆண்: இங்கே நான் காத்திருக்க
என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீ இருந்து
என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம் இந்த
ஜீவன் தான்

ஆண்: மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

ஆண்: மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

ஆண்: ஆராரோ பாடினாலும்
ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த
பாட்டு தானம்மா

ஆண்: மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

Other Songs From Paadu Nilave