கில்லாடி ஒருத்தன்

Killadi Oruthan Lyrics in Tamil

ஆண்: கில்லாடி ஒருத்தன் அல்லாடி அலஞ்சானே
இவ பின்னாடி ஒருத்தன் திண்டாடி திரிஞ்சானே

ஆண்: பந்தாடி ஒருத்தன் கொண்டாடி சிரிக்க
முன்னாடி நின்னானே
தள்ளாடி இருக்க என்னாகும் முடிவு
தன்னானே னானானே

ஆண்: எல்லாமே ஆளுற பூமி
நீ நல்லாத்தான் ஒரு வழி காமி
சொல்லாம கிடைக்கன்னும் கிள்ளாம கொடுக்கனும்
எல்லாமே நீதானே

ஆண்: முன்னோர நினைச்சிக்க போறான்
இவன் முன்னேற துணிஞ்சிட்டான் வாறான்
மண்ணோட விழுந்து பொன்னோட எழுந்து
விண்ணாள வருவானே

ஆண்: பொல்லாத உலகம் நில்லாது கலகம்தான்
கல்லாம எதுவும் செல்லாது ஒசரம்தான்
வந்தாலும் சரிதான் போனாலும் சரிதான்
என்னாகும் பார்ப்போமே

ஆண்: கைகாலும் மொளச்சதும் போதும்
இவன் கண்ணதாசன் மறைக்குது பாவம்
பித்தாக பிடிக்க பிஞ்சாக துடிக்க
மொத்தமா போனானே

ஆண்: ஒன்னொன்னா ஏறுது பாரம்
இவன் உக்கார ஏதுங்க நேரம்
உல்லாசம் உணர ஊரெல்லாம் அறியா
கோமாளி ஆனானே

ஆண்: தன்னானே தானானே
தன்னானே தானானே
தன்னானே தானானே
தன்னானே தானானே

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team