இது என்ன

Idhu Enna Lyrics in Tamil

ஆண்: இது என்ன கண்ணில் தாவுது
ஒரு மான் இங்கு
இதமொன்று நெஞ்சில் காயுது
அது ஏன் இங்கு
சொட்டு சொட்டாய் என் மனதை சுண்டுகிறாள்

ஆண்: ஏக்கங்கள் நான் கொள்ள
தாக்கங்கள்தான் இன்று சந்திக்கிறேன்
தூக்கங்கள் ஏன் இல்லை
நேற்று வரை என்று சிந்திக்கிறேன்

ஆண்: நெளிகின்றேன் பொறிகின்றேன்
விழுகின்றேன் அழுகின்றேன்
கொத்து கொத்தாய் என் மனதை கொஞ்சுகிறாள்

ஆண்: பாலை நிலமென வாடுமா
பாவை எனது ஆகுமா
பாத நினைவுகள் ஆருமா
பாதை இனி வீணாகுமா
நாளை என்னாகும்
ஏதும் சொல்லாதோ போராகுமோ

ஆண்: நெளிகின்றேன் பொறிகின்றேன்
விழுகின்றேன் அழுகின்றேன்
கொத்து கொத்தாய் என் மனதை கொஞ்சுகிறாள்

ஆண்: ஹ்ம்ம் விதை ஒன்று நெஞ்சில்
வீசியதொரு மான் அன்று
தளிர் ஒன்று கண்ணில் காணுகிறேன் நான் இன்று
பொங்கி வந்து என் உயிரில் தாங்குகிறாள்

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team