Kadhal Kanave Lyrics in Tamil
ஆண்: காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே
ஆண்: காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே
ஆண்: கனியே உன்ன காணக் காத்திருக்கேன்
அடியே வழி நானும் பாத்திருக்கேன்
தேனாழியில் நீராடுதே மனமே
ஓ பூவாளியில் நீ தூக்க வா தினமே
பெண்: காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே
ஆண்: சிதறாம சிறு மொழி பேசு
சிரிப்பாலே நறுக்குன்னு ஊசி
பதிச்சாலே பரவசம் ஆனேன் சொகமா
பெண்: சிறு நூலா துணியில் இருந்து
தனியாக விலகி விழுந்து
மனம் இங்கு இளகி போச்சு மெதுவா
ஆண்: இறகால படகா நீந்தி
காத்தில் நானும் மிதந்தேனே
கடிவாளக் குதிரையாக
எனதான் நீயும் இழுத்தாயே
மாறாது மனமே மானே
மடிமேலே விழுந்தேன் நானே
ஆண்: காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே
பெண்: பருவத்தில் பத்தியம் செஞ்ச
பதுங்காம மெதுவா மிஞ்ச
புதுவேகம் எடுத்து நடந்தேன் தனியே
ஆண்: உருவத்த நிழலா புடிச்சேன்
உறவாக கனவுல படிச்சேன்
உனக்காக நெசமா துடிச்சேன் மயிலே
பெண்: இரவோடு பகலா சேர
மாலை தேடி இருந்தேனே
கண்ணாடி தொட்டி மீனா
நானும் உன்ன பாா்த்தேனே
ஆண்: மாறாது மனமே மானே
மடிமேலே விழுந்தேன் நானே
ஆண்: காதல் கனவே ஆச மறச்சு
ஆண்: காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே
பெண்: கனியே உன்ன காணக் காத்திருக்கேன்
ஆண்: அடியே வழி நானும் பாத்திருக்கேன்
தேனாழியில் நீராடுதே மனமே
ஓ பூவாளியில் நீ தூக்க வா தினமே




