கரு கரு விழிகளால்

Karu Karu Vizhigalal Lyrics in Tamil
Movie: Pachaikili Muthucharam(பச்சைக்கிளி முத்துச்சரம்)
Music: Harris Jayaraj
Singers: Bombay Jayashree and Madhushree
Lyricist: Rohini(ரோகினி)

Karu Karu Vizhigalal Lyrics in Tamil

ஆண்: கரு கரு விழிகளால்
ஒரு கண்மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட
சிறு அமுதம் என்னை குடிக்குதே

ஆண்: இரவினில் உறங்கையில்
என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில்
ஒரு மின்னல் வந்து சாய்க்க

ஆண்: நீ
குழு: ஒரு மல்லி சரமே
ஆண்: நீ
குழு: இலை சிந்தும் மரமே
ஆண்: என்
குழு: புது வெள்ளி குடமே
ஆண்: உன்னை தேடும் கண்கள்

ஆண்:
குழு: நீ தங்க சிலையா
ஆண்: வெண்
குழு: நுரை பொங்கும் மலையா
ஆண்: மன்
குழு: மதன் பின்னும் வலையா
ஆண்: உன்னை தேடும் கண்கள்

ஆண்: புது புது வரிகளால்
என் கவிதை தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து
கண்கள் தாண்டி வழியுதே

ஆண்: மறந்திட மறந்திட
என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி
உன் முகமே என்னை சூழ

ஆண்: தாமரை இலை நீர் நீதானா
தனி ஒரு அன்றில் நீதானா
புயல் தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா

ஆண்: நீ
குழு: ஒரு மல்லி சரமே
ஆண்: மண்ணில்
குழு: இலை சிந்தும் மரமே
ஆண்: மின்னும்
குழு: புது வெள்ளி குடமே
ஆண்: உன்னை தேடும் கண்கள்

ஆண்:
குழு: நீ தங்க சிலையா
ஆண்: வெள்ளை
குழு: நுரை பொங்கும் மலையா
ஆண்: அம்பால்
குழு: மதன் பின்னும் வலையா
ஆண்: உன்னை தேடும் கண்கள்

ஆண்: ஒரு நாள் ஒரு நாள் என்றே
தினமும் போகும்
மறு நாள் வருமா என்றே
இரவில் இதயம் சாகும்

ஆண்: பேசும் போதே இன்னும்
ஏதோ தேடும்
கையின் ரேகை போலே
கள்ளத்தனம் ஓடும்

ஆண்: நீரே இல்லா பாலையிலே
நின்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே உச்சு கொட்டி
தொடர்ந்திடும் பிழை பிழை

ஆண்: கரு கரு விழிகளால்
ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட
சிறு அமுதம் என்னை குடிக்குதே

ஆண்: இரவினில் உறங்கையில்
என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கயில்
ஒரு மின்னல் வந்து சாய்க்க

ஆண்: தாமரை இலை நீர் நீதானா
தனி ஒரு அன்றில் நீதானா
புயல் தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா

ஆண்: தாமரை இலை நீர் நீதானா
குழு: ஒரு மல்லி சரமே
ஆண்: தனி ஒரு அன்றில் நீதானா
குழு: இலை சிந்தும் மரமே

ஆண்: புயல் தரும் தென்றல் நீதானா
குழு: நீ தங்க சிலையா
ஆண்: புதையல் நீதானா
குழு: மதன் பின்னும் வலையா

குழு: ஒரு மல்லி சரமே