கண் பேசும் வார்த்தைகள்

Kan Pesum Varthaigal Lyrics in Tamil
Movie: 7G Rainbow Colony(7ஜி ரெயின்போ காலனி)
Music: Yuvan Shankar Raja
Singer: Karthik
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)

Kan Pesum Varthaigal Lyrics in Tamil

ஆண்: கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

ஆண்: காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை

ஆண்: ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வழி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

ஆண்: கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

ஆண்: காட்டிலே காயும் நிலவு
கண்டு கொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை

ஆண்: தூரத்தில் தெரியும் வெளிச்சம்
பாதைக்கு சொந்தம் இல்லை
மின்னலின் ஒளியைப் பிடிக்க
மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை

ஆண்: விழி உனக்கு சொந்தமடி
வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கண்ட பின்னே
நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி

ஆண்: கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

ஆண்: உலகத்தில் எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது

ஆண்: பனித்துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்கள் எல்லாம்
அட புடவை கட்டி பெண் ஆனது

ஆண்: ஏ புயல் அடித்தால் மழை இருக்கும்
மரங்களும் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்

ஆண்: ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வழி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

ஆண்: ஹே கண் பேசும்

ஆண்: ஹே கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

ஆண்: காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை