எனக்கென ஒருவரும் பாடல் வரிகள்

Music: Ilaiyaraaja
Singer: Ilaiyaraaja
Lyricist: Pulamaipithan(புலமைப்பித்தன்)

Enakena Oruvarum Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்
உனக்கென நான் இருப்பேன்

—பின்னணி இசை—

ஆண்: எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்
உனக்கென நான் இருப்பேன்
உனக்கென வாழ்வதில் உண்டாகும் சந்தோஷம்
பெரிதென வாழ்ந்திருப்பேன்

ஆண்: பூமிதான்டா நம்ம தாயி
வீதிதான்டா நம்ம வீடு
இது போதும் போதும் கண்ணே நீ தூங்கு

ஆண்: எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்
உனக்கென நான் இருப்பேன்
உனக்கென வாழ்வதில் உண்டாகும் சந்தோஷம்
பெரிதென வாழ்ந்திருப்பேன்

—பின்னணி இசை—

ஆண்: பாற மேல மஞ்சள் நாத்த யாரு நட்டு வச்சது
பாவம் இந்த பச்ச மண்ணு என்ன தப்பு செஞ்சது
தொட்டில் போட்டு ஆட்டும் கையே விட்டு விட்டு போவதா
தொண்டை கெட்ட அன்னக்குஞ்சு கத்தி கத்தி சாவதா

ஆண்: அடி அம்மா அடி அம்மா
நீ பேசும் தெய்வமா
இது பாவம் பெரும் பாவம்
இத தெய்வம் செய்யுமா
இது நியாயம்தானா நீயே சொல்லம்மா

ஆண்: எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்

பெண்: நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்
அது எங்கும் போகவில்லே
நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்
கலங்கிட தேவையில்லே

பெண்: பூமி எங்கும் நம்ம வீடு
கண்ணில் என்ன நீரின் கோடு
இனி நாளை காலம் என்றும் நம்மோடு

பெண்: நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்
அது எங்கும் போகவில்லே
நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்
கலங்கிட தேவையில்லே

—பின்னணி இசை—

பெண்: பள்ளமுள்ள பூமி எல்லாம்
ஆத்து வெள்ளம் பாயுது
பாசமுள்ள கண்ணில் எல்லாம்
அன்னை முகம் தோணுது

பெண்: ஆறு காய்ஞ்சி போன பின்னும்
பூமி இங்கு வாழுது
அன்பு காய்ஞ்சி போயிருந்தா
வாழ்க்கை என்னஆவது

பெண்: அனுதாபம் அபிமானம்
அது இன்னும் சாகலே
அது போல ஒரு தெய்வம்
அத யாரும் பார்க்கலே
நல்ல காலம் வந்து சேரும் வாடாதே

பெண்: நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்
அது எங்கும் போகவில்லே
நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்
கலங்கிட தேவையில்லே

பெண்: பூமி எங்கும் நம்ம வீடு
கண்ணில் என்ன நீரின் கோடு
இனி நாளை காலம் என்றும் நம்மோடு

பெண்: நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்
அது எங்கும் போகவில்லே
நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்
கலங்கிட தேவையில்லே

 

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team