Chillena Oru Mazhai Thuli Lyrics in Tamil
ஆண்: சில்லென ஒரு மழைத்துளி
என்னை நனைக்குதேப் பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
ஆண்: உன் விழிகளிலே ஓஹோ
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளால் ஹோ
நான் மாறினேன் கண்ணே
பெண்: அடக் கருப்பட்டியே
என் சீனிக் கிழங்கே
சிரிச்சி கவுக்காத
என் கண்ணுக்குட்டியே
கம்மாக்கரையில
நீ கப்பல் ஒட்டாத.
பெண்: கண்ணால பாக்காம
கண்ணாலம் பண்ணலாமா
கைகோர்த்துப் போகலமா
ஆண்: கொஞ்சம் பார்த்துவிடு கொஞ்சம் பேசிவிடு
என்று என் விழிகள் அய்யய்யோ என்னைத் திட்ட
கோடை கால மழை வந்து போனப் பின்னும்
சாலை ஓரம் மரம் தன்னாலே நீர் சொட்ட
ஆண்: என்னைத் தாக்கும் புயலே
இரவோடு காயும் வெயிலே
ஓ ஓ ஓ உன்னாலே உன்னாலே
நூலில்லா காற்றாடி ஆனேனே
அடிப் பெண்ணே அடிக் கண்ணே
நான் விழுந்தால் உன் பாதம் சோ்வேனே
ஆண்: உன் விழிகளிலே ஓஹோ
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளால் நான் மாறினேன் கண்ணே
ஆண்: சில்லென ஒரு மழைத் துளி
என்னை நனைக்குதேப் பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
ஆண்: சுந்தரிக் கிண்ணரி மணிக்கொலுச
தரி வழக்கினில் கிழுகிழுக்க
தரி நின்னாறம் செரு பொன்னாரம்
இது மதுர மதுர கரிம்ப கலவேணி
மெதுபாணி நின்ரதய வணியலன்காரம்
சுரம்மாயி ஜதியாகி நுனரும் முயங்குமதிகாரம்
ஆண்: காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி
மீண்டும் நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா
கோபம் கொள்கையிலும் கிரங்க வைக்குதடி
மீண்டும் ஒருமுறை நீ கோபத்தில் பார்ப்பாயா
ஆண்: ஆளைக் கொள்ளும் அழகே
நிழல் கூட அழகின் நகலே
ஒரு நாளும் குறையாத
புது போதை கண்ணோரம் தந்தாயே
அணைத்தாலும் அணையாத
ஒருத் தீயாய் நெஞ்சோரம் வந்தாயே
ஆண்: அடி இடம் வலமாய்
ஆண் குழு: அடி இடம் வலமாய்
ஆண்: நான் ஆடினேன் பெண்ணே
ஒரு இடி மழையாய்
ஆண் குழு: ஒரு இடி மழையாய்
ஆண்: என்னைத் தாக்கினாய் முன்னே


