Movie: Dhaam Dhoom(தாம் தூம்)
Music: Harris Jayaraj
Singer: Haricharan
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)
Azhiyilae Lyrics in Tamil
ஆண்: ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
ஆண்: உன் குழலோடு விளையாடும்
காற்றாக உருமாறி
முந்தானை படியேறவா
மூச்சோடு குடியேறவா
ஆண்: உன் இடையோடு நடமாடும்
உடையாக நான் மாறி
எந்நாளும் சூடேறவா
என் ஜென்மம் ஈடேறவா
ஆண்: ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
ஆண்: உன் விம்மென்ற கன்னத்தில்
திம்மென்ற நெஞ்சத்தில்
இச்சென்று இதழ் வைக்கவா
இச்சைக்கோர் விலை வைக்கவா
ஆண்: உன் உம் என்ற சொல்லுக்கும்
இம்மென்ற சொல்லுக்கும்
இப்போதே தடை வைக்கவா
மௌவுனத்தில் குடி வைக்கவா
ஆண்: அகம் பாதி முகம் பாதி
நகம் பாயும் சுகம் மீதி
மறைத்தாலும் மறக்காது அழகே
ஆண்: அடிவானம் சிவந்தாலும்
கோடிப்பூக்கள் பிறந்தாலும்
உனைப் போல இருக்காது அழகே
ஆண்: அடிவானம் சிவந்தாலும்
கோடிப்பூக்கள் பிறந்தாலும்
உனைப் போல இருக்காது அழகே
அழகே அழகே வியக்கும் அழகே
அழகே அழகே வியக்கும் அழகே