Akkam Pakkam Lyrics in Tamil
பெண்: அக்கம் பக்கம் யாருமில்லா
பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்
பெண்: என் ஆசை எல்லாம்
உன் இருக்கத்திலே
என் ஆயுள்வரை
உன் அணைப்பினிலே
பெண்: வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
பெண்: அக்கம் பக்கம் யாருமில்லா
பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்
பெண்: நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலைகோதி
பெண்: காதோரத்தில் எப்போதுமே
உன் மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடுதான் கை கோர்த்துதான்
உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்
பெண்: வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
பெண்: அக்கம் பக்கம் யாருமில்லா
பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்
பெண்: நீயும் நானும் சேரும் முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல் நெஞ்சம் இன்று
விண்ணில் மிதக்கிறதே
பெண்: உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்து கொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்
பெண்: வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்