என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

Song Name: Yennamma Ippadi Panreengalema
Movie: Rajinimurugan(ரஜினிமுருகன்)
Music: D. Imman
Singer: D. Imman
Lyricist: Yugabharathi(யுகபாரதி)
Year: 2015

Yennamma Ippadi Panreengalema Lyrics in Tamil

ஆண்: வாடி வாடி வாடி
தமிழோட திருமகளே
எங்க அம்மாவோட மருமகளே

ஆண்: என்னடி நெனச்சிட்டு இருக்க
லவ் பண்ற மாரி பாபிங்களாம்
லவ் பண்ற மாறி பேசுவீங்களாம்

ஆண்: இப்போ எங்க அப்பாவுக்கு பிடிக்கலை
எங்க ஆட்டுக்குட்டிக்கு பிடிக்கலை
சீனப் போட்ட விட்ருவோமா ஏய்
எனக்கு நியாயம் கெடைச்சே ஆகணும்டீயே

பெண்: என்னடா தண்ணிய போட்டு வந்து
தகராறு பண்றியா

ஆண்: பின்ன சர்பத்த குடிச்சிட்டா
தகராறு பண்ணுவாங்க

பெண்: மரியாதையா போயிரு
இல்ல போலிஸ கூப்புடுவேன்
போலிஸ கூப்புடுவேன்
போலிஸ கூப்புடுவேன்

ஆண்: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

—பின்னணி இசை—

ஆண்: கத்தரிப் பூ தாவணி
கட்டி வந்த மோகினி
கித்தாப்பு காட்டுறாளே
என்ன செக்காட்டம் ஆட்டுராளே

ஆண்: அல்லிப் பூவா சிரிச்சவ
அசின் போல நடிச்சவ
அப்பன் பேச்சகேக்குறாளே
என்ன அக்கு அக்கா பேக்குறாளே

ஆண்: பொட்ட புள்ள வனப்ப காட்டி
போனா உசுர சுண்டி
அத எண்ணி மனசு நோக
ஆனேன் சரக்கு வண்டி

ஆண்: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

—பின்னணி இசை—

ஆண்: வளவி வாங்க போகையிலே
வளைஞ்சி வளைஞ்சி குடுத்தவ
கொலுசு வாங்க போகையிலே
குலுங்கி குலுங்கி குதிச்சவ

ஆண்: பொடவ வாங்க போகையிலே
போனதென்ன தள்ளி
நான் புருஷனாகப் போகையிலே
போடுறாளே கொள்ளி

ஆண்: முகத்துக்கு நாளு பூசி
நாளே பவுடரு
நெருக்கத்தில் அழக ரசிக்க
போனா மருடரு

ஆண்: ஹேர் பின்னு பெண்டப் போல
என்ன அவளும் ஆக்கிட்டா
போரு வெல்லு மோட்டரையே
நெஞ்ச பொளந்து போட்டுட்டா

ஆண்: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

—பின்னணி இசை—

ஆண்: கலரு பூந்தி வாங்கித் தர
கலங்க கலங்க அடிச்சவ
கடலமிட்டாய் வாங்கி தர
கவித கவித படிச்சவன்

ஆண்: நகத்த போல காதலையும்
வீசுறாளே வெட்டி
நான் செதறு தேங்கா போல ஆக
ஓடுறாளே எட்டி

ஆண்: பணப் பெட்டி போல கண்ணி
மனசப் பூட்டிப்பா
கரிச்சட்டி போல என்ன
கழுவி ஊதிட்டா

ஆண்: பள்ளிக்கூடம் போகும்போது
பார்த்த பார்வை மறக்கல
சட்ட மேல பட்ட இங்க்க
இன்னும் கூடத் துவைக்கல

ஆண்: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

—பின்னணி இசை—

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team