உன் மேல ஒரு கண்ணு

Un Mela Oru Kannu Lyrics in Tamil
Song Name: Un Mela Oru Kannu
Movie: Rajinimurugan(ரஜினிமுருகன்)
Music: D. Imman
Singers: Jithin Raj and Mahalakshmi Iyer
Lyricist: Yugabharathi(யுகபாரதி)
Year: 2015

Un Mela Oru Kannu Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொறப்பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

ஆண்: இருக்குறேன் உன்னால
பறக்குறேன் தன்னால
கெரங்குறேன் நொறுங்குறேன்
பாரு நான் உன் மாப்புள்ள

—பின்னணி இசை—

பெண்: உன் மேல ஒரு கண்ணு
நான்தான் உன் மொறப்பொண்ணு
உன்னோட இவ ஒன்னு
உன்ன மறந்தா வெறும் மண்ணு

பெண்: இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெரங்குறேன் நொறுங்குறேன்
நீயே தான் என் மாப்புள்ள

—பின்னணி இசை—

ஆண்: கொஞ்சுனா மிஞ்சுற
மிஞ்சுனா கொஞ்சுற
ஏன்டி இந்த நாடகம்

பெண்: கெஞ்சுனா அஞ்சுற
அஞ்சுனா கெஞ்சுற
நாளும் உங்க நியாபகம்

ஆண்: சொல்லாம கொள்ளாம மூடி வச்சு
என்ன அங்கேயும் இங்கேயும் அலைய விட்ட
பெண்: அள்ளாம கில்லாம நோக வச்சு
என்ன முன்னாலும் பின்னாலும் மொனங்க விட்ட

ஆண்: ஒத்துக்கிட்டா மாமன்தான்
கட்டிக்க வாறேன் வாறேன்

பெண்: உன் மேல ஒரு கண்ணு
நான்தான் உன் மொறப்பொண்ணு
உன்னோட இவ ஒன்னு
உன்ன மறந்தா வெறும் மண்ணு

—பின்னணி இசை—

பெண்: வெட்டுனா ஒட்டுற
ஒட்டுனா வெட்டுற
லூசு பையன் மாதிரி

ஆண்: கட்டுனா தட்டுற
தட்டுனா கட்டுற
வா வா கொல்லுதே வெறி

பெண்: கத்தாம சுத்தாம நீ இருந்தா
உன்ன திட்டாம கொட்டாம ஏத்துக்குவேன்
ஆண்: நிக்காம கிக்கேர நீ கொடுத்தா
மிச்சம் வெக்காம குத்தாட்டம் போட்டுக்குவேன்

பெண்: பொட்டு வச்ச பொண்ணு நான்
தொட்டுக்க தாரேன் தாரேன்

ஆண்: உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொறப்பொண்ணு
பெண்: உன்னோட இவ ஒன்னு
உன்ன மறந்தா வெறும் மண்ணு

ஆண்: இருக்குறேன் ஒன்னால
பெண்: பறக்குறேன் தன்னால
ஆண்: கெரங்குறேன்
பெண்: நொறுங்குறேன்
நீயே தான் என் மாப்புள்ள

—பின்னணி இசை—

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team