Venmegam Pennaga Song Lyrics in Tamil
ஆண்: வெண்மேகம் பெண்ணாக
உருவானதோ
என்நேரம் எனைப் பார்த்து
விளையாடுதோ
ஆண்: உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே
ஆண்: வார்த்தை ஒரு வார்த்தை
சொன்னால் என்ன
பார்வை ஒரு பார்வை
பார்த்தால் என்ன
ஆண்: உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே
ஆண்: வெண்மேகம் பெண்ணாக
உருவானதோ
என்நேரம் எனைப் பார்த்து
விளையாடுதோ
ஆண்: மஞ்சள் வெயில் நீ
மின்னல் ஒளி நீ
உன்னைக் கண்டவரை கண் கலங்க
நிற்க வைக்கும் தீ
ஆண்: பெண்ணே என்னடி
உண்மை சொல்லடி
ஒரு புன்னகையில் பெண்ணினமே
கோபபட்டதென்னடி
ஆண்: தேவதை வாழ்வது வீடில்லை கோயில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா உன் அழகை பாட
ஆண்: கண் மூடி ஒரு ஓரம்
நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம்
நான் காண்கிறேன்
ஆண்: உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே
ஆண்: எங்கள் மனதை
கொள்ளை அடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும்
எங்கு சென்று படித்தாய்
ஆண்: விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல
கட்டளைகள் விதித்தாய்
ஆண்: உன் விரல் பிடித்திடும்
வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
ஆண்: என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ
ஆண்: வெண்மேகம் பெண்ணாக
உருவானதோ
என்நேரம் எனைப்பார்த்து
விளையாடுதோ