Kadhal Vandhale Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: காதல் வந்தாலே
காலு ரெண்டும் தண்ணாலே
காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே
—பின்னணி இசை—
பெண்: ஆசை வந்தாலே
ஐ லவ் யூ சொன்னாலே
கண்ணு ரெண்டும் சுத்துதே உந்தன் முன்னாலே
ஆண்: ஹேய் திட்டம் போட்டுப் பார்த்து
திமிராப் பேசி என்னை நீ வளைச்ச
பெண்: வெட்டறுவா மீசை முறுக்கி மொறைச்ச
என் நெஞ்சத் கலைச்ச
ஆண்: ஹேய் வாடி ஹேய் வாடி
நீ வாடாமல்லிப் பூதாண்டி
ஆண்: இடுப்பு கொண்டை ஊசி
சிரிப்பு விண்டோவ் ஏசிதான்
ஹே முதுகு தேக்குமரம்
முழுசாப் பார்த்தா ஜுரம்தான்
—பின்னணி இசை—
பெண்: நெத்தி நடுவேப் பொட்டு
வைக்கவே கஷ்டம் ஆச்சு
உன்னை நெனைச்சே ஒரு ஓரம் வச்சுக்கிறேன்
ஆண்: முன்னப்போல நான் இல்ல
மொத்தம்மா மாறியாச்சு
குற்றவாலியக் கூட கொஞ்சிக் கூப்பிடுறேன்
பெண்: நெசமா ஒன்னப் பத்திப்
பேச நேரன் பத்தலடா
மெதுவா முன்னப் போல பூமி சுத்தலடா
ஆண்: சட்டினிய விட்டுப்புட்டு
இட்லியத் திண்ணுப்புட்டேன்
சட்டுன்னு அம்மாக்கிட்ட ஏதோ ரீலு விட்டேன்
பெண்: ஹே வீரா ஹேய் சூறா
நீ ஒட்டிக்கிட்ட நெஞ்சுப் பூரா
பெண்: பார்வைப் பட்டாக் கத்தி
பாயும் என்னைச் சுத்தி வா
ஹோ ஓ எனக்கு எப்போதுமே
நெனைப்பு உன்னைப் பத்தித்தான்
—பின்னணி இசை—
ஆண்: ஹான் மீசைத் திருத்தச் சின்ன
கத்திரிகோல வச்சேன்
முத்த நினைப்பில் நானும்
மூக்கை வெட்டிக்கிட்டேன்
பெண்: பட்டுப் பொடவக்கட்டி
பட்டுன்னு காலில் விழ
பத்து தடவை தினம்
ஒத்திகைப் பார்த்துக்கிட்டேன்
ஆண்: சத்துள்ள சாப்பாடெல்லாம்
தின்னு நின்னு என் ஒடம்ப
சட்டுன்னு சோலத் தட்டை
போலே மாத்துறியே
பெண்: பட்டுன்னு வெட்டிப் பேசி
முட்டி நிக்கும் என் குணத்த
கட்டித்தான் போட்டு ரொம்ப சாந்தம் மாத்துறியே
ஆண்: ஹேப் பாரு நீ பாரு
நீ பார்த்தா மனம் ஜோரு ஜோரு
ஆண்: உனக்கு முன்னாலதான்
நிலவே டல்லா இருக்கு
எனக்கு கிட்டதட்ட
இதயமும் புல்லா இருக்கு
—பின்னணி இசை—



