Rukku Rukku Lyrics in Tamil
ஆண்: ருக்கு ருக்கு ருக்கு
அரே பாபா ருக்கு
ஓ மை டார்லிங்
பெண்: மாமி
ஆண்: ப்யாரி ஜானு கிவ் மீ எ லுக்கு
ஆண்: ருக்கு ருக்கு ருக்கு
அரே பாபா ருக்கு
ஓ மை ஜானு கிவ் மீ எ லுக்கு
ருக்கு ருக்கு ருக்கு
பெண் குழு: ஓஹோ பேஷ்
ஆண்: ருக்கு ருக்கு ருக்கு
ஆண்: தூணுக்குள்ளும் இருப்பான்டி
துரும்பிலும் இருப்பான்டி
நம்பியவர் நெஞ்சில் நிற்பான்டி
ஆண்: குங்குமத்த வெப்பான்டி
கொஞ்சி கொஞ்சி நிற்பான்டி
கொண்டவன் போல் துணை யாரடி
ஆண்: பூசல்கள் வந்தால்
டோன்ட் பி ஆங்க்ரி
பொறுமையை காத்தால்
வாழ்க்கை ஜாங்கிரி
ஆண்: நல்ல குடும்பம்தான் ஒரு கோயில்
என்றும் தெய்வீகம் வைபோகம்
கொண்டாடும் இடமல்லவா
பெண்: ஹஸ்பண்டுதான் போயாச்சு
சஸ்பெண்டு தான் ஆயாச்சு
ஊரறியும் என் கேஸு தான்
பெண்: பட்டதெல்லாம் பட்டாச்சு
கண்ணீர் ரொம்ப விட்டாச்சு
ஆயிடுத்து டைவர்ஸுதான்
பெண்: திருமண வாழ்க்கை
டோடல் வேஸ்ட்டு
எனக்கதில் இனிமேல்
இல்லை டேஸ்ட்டு
பெண்: ரொம்ப புடிச்சது
அப்பன் வீடு
என்றும் உல்லாசம் உற்சாகம்
உண்டாகும் இடமல்லவா
ஆண்: தரிகிட தரிகிட
தரிகிட தரிகிட
ஆண்: ஒரு மாது தலைவனை
ஒதுக்குதல் தவறு
நெடுங்காலம் நிழல் தர
உனக்கேது சுவரு
பெண்: ஆயிரம் காலம்
பயிராய் விளைந்தது
அறுவடையாகி நேற்றே முடிந்தது
ஆண்: சோகத்தில் உண்டாச்சு கோபம்
அந்த கோபத்தில் யாருக்கு லாபம்
பெண்: யார் என்ன சொன்னாலும் டோன்ட் கேர்
நான் கூண்டுக்குள் சிக்காத ப்ரீ ப்ர்ட்
ஆண்: அடி போக போக
மாமி பேச்சு புரியும்
ஆண் மற்றும் பெண் குழு: ருக்கு ருக்கு ருக்கு
அரே பாபா ருக்கு
ஓ மை ஜானு கிவ் மீ எ லுக்கு
ருக்கு ருக்கு ருக்கு
பெண்: விரல் தாண்டி நகங்களும் வளர்வது சரியா
அதை நாமும் நறுக்கிட நினைப்பது பிழையா
ஆண்: நகத்தினை மனம் போல் நீதான் நறுக்கணும்
ஆயினும் விரலை பிரிந்தா இருக்கணும்
பெண்: அம்மாடி ஏன் இந்த போட்டி
இப்போ என்னாச்சு சொல்லுங்கோ மாமி
ஆண்: எப்போதும் லைப் பார்ட்னர் வேண்டும்
எது ஆனாலும் துணை தேட தோன்றும்
அன்பு 50 60 ஆன போதும் மலரும்
ஆண்: தூணுக்குள்ளும் இருப்பான்டி
துரும்பிலும் இருப்பான்டி
நம்பியவர் நெஞ்சில் நிற்பான்டி
ஆண்: குங்குமத்த வெப்பான்டி
கொஞ்சி கொஞ்சி நிற்பான்டி
கொண்டவன் போல் துணை யாரடி
ஆண்: பூசல்கள் வந்தால்
டோன்ட் பி ஆங்க்ரி
பொறுமையை காத்தால்
வாழ்க்கை ஜாங்கிரி
ஆண்: நல்ல குடும்பம்தான்
ஒரு கோயில்
என்றும் தெய்வீகம் வைபோகம்
கொண்டாடும் இடமல்லவா
பெண் குழு: ருக்கு ருக்கு ருக்கு
அரே பாபா ருக்கு
ஓ மை ஜானு கிவ் மீ எ லுக்கு
ருக்கு ருக்கு ருக்கு



