கல்யாணம் கச்சேரி

Music: Deva
Singer: S. P. Balasubrahmanyam

Kalyanam Katcheri Lyrics in Tamil

ஆண்: கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே
ரயிலேறி போயாச்சிடி
என் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல
ரோஜாக்கள் ஏராளன்டி

ஆண்: என் வாழ்வில் வந்தாச்சு ஆகஸ்டு பதினஞ்சு
மாலினி ஹேய் மோகினி
மாம்பிஞ்சு நீ பூபஞ்சு நீ
குயில் குஞ்சு நீ வா கொஞ்சு நீ

ஆண்: கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே
ரயிலேறி போயாச்சிடி

ஆண்: கையெழுத்து
போட்டாலென்ன
தலையெழுத்து மாறுமா

ஆண்: உயிர் எழுத்து
என்னை விட்டு
மெய் எழுத்து வாழுமா

ஆண்: எத்தனை நாள்
சொன்னதுண்டு
பள்ளி அறை காவியம்

ஆண்: சொன்னதற்க்கு
சாட்சி உண்டு
சின்னஞ்சிறு ஓவியம்

ஆண்: ஓடைக்கு தென்றல் மீது இன்று என்ன கோபம்
ஒட்டாமல் எட்டிச் சென்றால் யாருக்கென்ன லாபம்
நீ சின்னமான் என் சொந்த மான்

ஆண்: கல்யாணம் கச்சேரி கால் கட்டுஎல்லாமே
ரயிலேறி போயாச்சிடி

ஆண்: அள்ளி அள்ளி
நானெடுக்க
வெள்ளி ரதம் வந்தது

ஆண்: சொல்லி சொல்லி
நான் படிக்க
பாட்டெடுத்து தந்தது

ஆண்: அல்லி விழி
கிள்ளை மொழி
பிள்ளை மனம் வென்றது

ஆண்: வெல்வெட்டு போல்
வண்ண முகம்
கல்வெட்டு போல் நின்றது

ஆண்: சிக்கென்று நானும் நீயும் ரெக்கை கட்ட வேண்டும்
சிட்டு போல் எட்டு திக்கும் சுற்றி பார்க்க வேண்டும்
வா மெல்ல வா நான் அள்ள வா

ஆண்: கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே
ரயிலேறி போயாச்சிடி

ஆண்: என் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல
ரோஜாக்கள் ஏராளன்டி

ஆண்: என் வாழ்வில் வந்தாச்சு ஆகஸ்டு பதினஞ்சு
மாலினி ஹேய் மோகினி
மாம்பிஞ்சு நீ பூபஞ்சு நீ
குயில் குஞ்சு நீ வா கொஞ்சு நீ

ஆண்: கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே
ரயிலேறி போயாச்சிடி

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team