Kurukku Siruthavale Lyrics in Tamil
ஆண்: குறுக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கரைச்சவளே
ஆண்: நெஞ்சில் மஞ்ச தேச்சுக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்குள் மணியாக
என்னக் கொஞ்சம் மாத்து தாயே
ஆண்: குறுக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கரைச்சவளே
ஆண்: நெஞ்சில் மஞ்ச தேச்சுக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்குள் மணியாக
என்னக் கொஞ்சம் மாத்து தாயே
பெண்: ஒரு கண்ணில் நீா் கசிய
உதட்டு வழி உசிர் கசிய
உன்னாலே சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே
பெண்: அட ஆத்தோட விழுந்த இலை
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே
ஆண்: குறுக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கரைச்சவளே
பெண்: நெஞ்சில் மஞ்ச தேச்சுக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்குள் மணியாக
என்னக் கொஞ்சம் மாத்து தாயே
பெண்: கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே
கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே
ஆண்: கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே
ஒரு மொழியில் சிரிச்சு பேசறியே
பெண்: வாயி மேல வாய வச்சு
வார்த்தைகளை உறிஞ்சிபுட்ட
விரல வச்சு அழுத்திய கழுத்துல
கொளுத்திய வெப்பம் இன்னும் போகல
ஆண்: அடி ஒம்போல செவப்பு இல்ல
கணுக்கால் கூட கருப்பு இல்ல
நீ தீண்டும் இடம் தித்திக்குமே
இனி பாக்கி ஒடம்பும்
செய்ய வேண்டும் பாக்கியமே
ஆண்: குறுக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கரைச்சவளே
ஆண்: நெஞ்சில் மஞ்ச தேச்சுக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்குள் மணியாக
என்னக் கொஞ்சம் மாத்து தாயே
ஆண்: ஒரு தடவ இழுத்து அணச்சபடி
உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே
பெண்: உம் முதுக தொலைச்சி வெளியேற
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே
ஆண்: மழையடிக்கும் சிறு பேச்சு
வெயிலடிக்கும் ஒரு பார்வை
ஒடம்பு மண்ணில் புதையிற வரையில்
உடன் வரக் கூடுமோ
பெண்: உசுர் என்னோட இருக்கயில
நீ மண்ணோட போவதெங்கே
அட உன் ஜீவனில் நான் இல்லையா
கொல்ல வந்த மரணம் கூட குழம்புமைய்யா
ஆண்: குறுக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கரைச்சவளே
ஆண்: நெஞ்சில் மஞ்ச தேச்சுக் குளிக்கையில்
பெண்: உன்னக் கொஞ்சம் பூசுவேன்யா
ஆண்: உன் கொலுசுக்குள் மணியாக
என்னக் கொஞ்சம்
பெண்: மாத்துவேன்யா