கனவே கலையாதே

Movie: Kannedhirey Thondrinal(கண்ணெதிரே தோன்றினாள்)
Music: Deva
Singers: P. Unni Krishnan and K. S. Chithra
Lyricist: Vairamuthu(வைரமுத்து)

Kanave Kalaiyadhe Lyrics in Tamil

ஆண்: கனவே கலையாதே
காதல் கனவே கலையாதே

ஆண்: கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்

ஆண்: மரகத வார்த்தை சொல்வாயா
மௌனத்தினாலே கொல்வாயா
சின்ன திருவாய் மலர்வாயா

ஆண்: கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்

ஆண்: கனவே கலையாதே
காதல் கனவே கலையாதே

ஆண்: நீ மௌனம் காக்கும்போதும்
உன் சார்பில் எந்தன் பேரை
உன் தோட்டப் பூக்கள் சொல்லும் இல்லையா

பெண்: ஒரு தென்றல் தட்டும்போதும்
கடும் புயலே முட்டும்போதும்
அட பூக்கள் பொய்கள் சொல்வதில்லையே

ஆண்: உன் இதழை கேட்டால்
அது பொய்கள் சொல்லும்
உன் இதயம் கேட்டால்
அது மெய்கள் சொல்லும்

பெண்: இதயத்தை கேட்க நேரமில்லை
இது வரை இதயத்தில் யாருமில்லை
சந்து கிடைத்தால் நுழைவாயா

ஆண்: கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்

ஆண்: உண்மை காதல் உண்டு
அதை உள்ளே வைத்துக்கொண்டு
ஒரு மன்மத சபையில் சாபம் வாங்காதே

பெண்: மெல்லிய மழையின் துளிகள்
ஒரு மேகத்துக்குள் உண்டு
அதுதானே பொழியும் பிழியப் பார்க்காதே

ஆண்: நீ மழை தரும் முகிலா
இல்லை இடி தரும் முகிலா
என் வேர் நனைப்பாயா
இல்லை விலகிடுவாயா

பெண்: ஆவணி மாதம் கழியட்டுமே
கார்த்திகை வந்தால் மழை வருமே
இன்னும் சில நாள் பொறு மனமே

ஆண்: கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடு ஓர் வாசகம்

ஆண்: கனவே கலையாதே
காதல் கனவே கலையாதே

ஆண்: கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்

ஆண்: மரகத வார்த்தை சொல்வாயா
மௌனத்தினாலே கொல்வாயா
சின்ன திருவாய் மலர்வாயா

ஆண்: கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடு ஓர் வாசகம்

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team