Chinna Chinna Kiliye Lyrics in Tamil
ஆண்: சின்ன சின்ன கிளியே
பஞ்சவா்ண கிளியே
சின்ன சின்ன கிளியே
பஞ்சவா்ண கிளியே
ஆண்: பால்சுற்றும் நட்சத்திரம் பாா்த்தாயா
தேன் மொட்டும் முல்லை மொட்டு பாா்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை பாா்த்தாயா
கண்கொத்தும் பறவை ஒன்றை பாா்த்தாயா
ஆண்: கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே
பஞ்சவா்ண கிளியே
ஆண்: நிலா நிலா காதல் நிலா
அவள் வாழ்வது உள்ளூாிலா
உலா உலா வா வெண்ணிலா
கண் வாழ்வது கண்ணீாிலா
ஆண்: பாதை கொண்ட மண்ணே
அவளின் பாத சுவடு பாா்த்தாயா
தோகை கொண்ட மயிலே
அவளின் துப்பட்டாவை பாா்த்தாயா
ஆண்: ஊஞ்சலாடும் முகிலே
அவளின் உச்சந்தலையை பாா்த்தாயா
ஓடுகின்ற நதியே
அவளின் உள்ளங்காலை பாா்த்தாயா
ஆண்: கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே
பஞ்சவா்ண கிளியே
ஆண்: எங்கே எங்கே விண்மீன் எங்கே
பகல் வானிலே நான் தேடினேன்
அங்கே இங்கே காணோம் என்று
அடி வானிலே நான் ஏறினேன்
ஆண்: கூடு தேடும் கிளியே
அவளின் வீடு எங்கே பாா்த்தாயா
உள்ளாடும் காற்றே
அவளின் உள்ளம் சென்று பாா்த்தாயா
ஆண்: தூரல் போடும் துளியே
உயிரை தொட்டுப் போனவள் பாா்த்தாயா
பஞ்சு போன்ற நெஞ்சை
தீயில் விட்டுப் போனவள் பாா்த்தாயா
ஆண்: கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே
பஞ்சவா்ண கிளியே
ஆண்: பால்சுற்றும் நட்சத்திரம் பாா்த்தாயா
தேன் மொட்டும் முல்லை மொட்டு பாா்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை பாா்த்தாயா
கண்கொத்தும் பறவை ஒன்றை பாா்த்தாயா
ஆண்: கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே
பஞ்சவா்ண கிளியே
