இரவிங்கு தீவாய் நம்மை சூழுதே

Iravingu Theevai Lyrics in Tamil
Movie: 96
Music: Govind Vasantha
Singers: Chinmayi and Pradeep Kumar

Iravingu Theevai Lyrics in Tamil – Umadevi

பெண்: இரவிங்கு தீவாய் நம்மை சூழுதே
விடியலும் இருளாய் வருதே
நினைவுகள் தீயாய் அலை மோதுதே
உடலிங்கு சாவாய் அழுதே

ஆண் மற்றும் பெண்: பிரிவே உருவாய்
கரைந்து போகிறேன்
உயிரின் உயிரை
பிரிந்து போகிறேன்

ஆண்: மலைகளின் நதிபோல்
மனம் வழிந்து வந்தாய்
வருண்டிடும் நிலத்தில்
பல கடல்கள் தந்தாய்
கனவே துணையாய்
ஒழிந்து போகட்டும்

ஆண்: இரவிங்கு தீவாய்
நம்மை சூழுதே
விடியலும் இருளாய் வருதே

பெண்: இந்த தாமரை
குளம் மீறி தனி ஆகுதே
அதன் சூரியன்
பகல் இன்றி வெயில் காயிதே
ஒரு பாதையில்
இரு ஜீவன் துணை தேடுதே
ஆண் மற்றும் பெண்: அட காலங்கள்
தடை மீறி தடை போடுதே

ஆண் மற்றும் பெண்: நீ இன்றி நானே
தினம் வாழ்வதொரு வாழ்வா
வாழவே வா நீ தான்
உயிரின் உயிரே வரவா வரவா

ஆண்: தினம் தினம் உயிர்த்தெழும்
மனம் அன்றாடம் மாயுமே
உயிர் வரை நிறைந்துணை
மனம் கொண்டாடி வாழுமே

ஆண்: மரங்கள் சாய்ந்து கூடு வீழ்ந்தும்
குயில்கள் ராகம் பாடுமே
ஆண் மற்றும் பெண்: இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்
நிலவு பொறுமை காக்குமே

ஆண்: மழை வழி கடல் விடும்
விண்காதல் மண்ணை சேருமமே
உன்னை உடல் பிரிந்தினும்
என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே
நீ போய் வா வா வா