Kurumba Lyrics in Tamil
ஆண்: குறும்பா
குறும்பா
குறும்பா
குறும்பா
—பின்னணி இசை—
ஆண்: உயரம் குறைந்தேன் உன்னால்
மணலில் வரைந்தேன் உன்னால்
கடலில் கரைந்தேன் உன்னாலே
ஆண்: சிறகாய் விரிந்தேன் உன்னால்
தரையில் பறந்தேன் உன்னால்
நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே
ஆண்: ஒற்றை கிரையோன் ரெண்டாய் உடைத்து
கிறுக்கிடுவோம்
உருளை சீவல் பையை வெடித்து நொறுக்கிடுவோம்
நொறுக்கிடுவோம்
ஆண்: குறும்பா
என் உலகே நீதான்டா
குறும்பா
என் உயிரே நீதான்டா
ஆண்: குறும்பா
என் உலகே நீதான்டா
குறும்பா
என் உயிரே நீதான்டா
—பின்னணி இசை—
ஆண்: விண்வெளி மீன்களில் எல்லாம்
உன் விழிதானே பார்ப்பேன்
வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன்
ஆண்: வெற்றிகள் ஆயிரம் வந்தால்
புன்னகையோடு ஏற்பேன்
உன்னிடம் மட்டும் தானே தோற்பேன்
ஆண்: ஆட்டம் போடும் போதெல்லாம்
உலகே அழகாய் மாறும்
வீட்டு பாடம் செய்தாலோ
ரத்த அழுத்தம் ஏறும்
ஆண்: உந்தன் குறும்பு மரபணு
எவ்வழி கொண்டாய்
எனக்கு தெரியாதா
ஆண்: குறும்பா
என் உலகே நீதான்டா
குறும்பா
என் உயிரே நீதான்டா
ஆண்: குறும்பா
என் உலகே நீதான்டா
குறும்பா
என் உயிரே நீதான்டா
ஆண்: உளறல் மொழிகள் உன்னால்
கார்ட்டூன் கனவும் உன்னால்
கிறுக்காய் ஆனேன் உன்னாலே
ஆண்: எறும்போடெறும்பாய் சில நாள்
பூனை நாயாய் சில நாள்
மனிதன் ஆனேன் உன்னாலே
ஆண்: விந்தை என்று கையில் வந்தாயே
என் மனம் குளிர
தந்தை என்று பட்டம் தந்தாயே
நான் தலை நிமிர தலை நிமிர
ஆண்: குறும்பா
என் உலகே நீதான்டா
குறும்பா
என் உயிரே நீதான்டா
ஆண்: குறும்பா
என் உதிரம் நீதான்டா
குறும்பா
என் விடியல் நீதான்டா
—பின்னணி இசை—
