Tik Tik Tik Title Track Lyrics in Tamil
பெண்: டிக் டிக் டிக்
பெண்: டிக் டிக் டிக்
பெண்: உன் செவிகளில் சொட்டு சொட்டென
காலத் துளியா
டிக் டிக் டிக்
இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம்
கொட்டும் ஒலியா
ஆண்: எவ்வதின் நுதிக்கான நீயாற்றும் ஏதும்
எவ்வாறு இங்கே பிழை
பவ்வத்தின் துளி மொண்டு
மாகஞ்செய்யாது அவ்வானில் எங்கே மழை
ஆண்: எவ்வதின் நுதிக்கான நீயாற்றும் ஏதும்
எவ்வாறு இங்கே பிழை
பவ்வத்தின் துளி மொண்டு
மாகஞ்செய்யாது அவ்வானில் எங்கே மழை
ஆண்: விதி சிறிது மதி பெரிது
தடை சிறிது விடை பெரிது ஏ
வலி சிறிது வழி பெரிது
பொருள் சிறிது அருள் பெரிது
பெண்: டிக் டிக் டிக்
உன் செவிகளில் சொட்டு சொட்டென
காலத் துளியா
டிக் டிக் டிக்
இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம்
கொட்டும் ஒலியா
பெண்: டிக் டிக் டிக்
உன் செவிகளில் சொட்டு சொட்டென
காலத் துளியா
டிக் டிக் டிக்
இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம்
கொட்டும் ஒலியா
ஆண்: மோதல் தொடங்கும் படி
சரிந்துவிட்ட போதும்
குழந்தைகள் போல நாம்
நிற்க பிடிவாதம் வேண்டும்
ஆண்: இரவு வானத்தை பார்
ஜொலிக்கும் நட்சத்திரம்
அங்கே தான் போகலாம் வா
ஏறிக்கொள் ஆகச வானம்
ஆண்: கனவுகள் நிஜமாகலாம்
தினமும் முன்னேற்றம் அடைந்தால்
நாட்டில் இருந்து விண்வெளிக்கு
வி ஆர் அஸ்ட்ரோனோமிகள்
ஓடி ஓடி நாம் நாடி தேடி
இலக்கு அடைவதை லட்சியம்
வெற்றியுடன் நாம் திரும்புவோமே
உயிர் மேல் சத்தியம்
பெண்: நமக்கென பல போர்கள் இருக்கையில்
வெளியிருந்தொரு விண்கல் வருவதா
அதை உடைத்திடு கதவடைத்திடு
பின் நாம் போரிடுவோம்
ஆண்: மொழி மத இன பேதம் இருக்கையில்
நம்மை அழித்திட வானம் விழுவதா
பெண்: அதை தடுத்திடு
கதை முடித்திடு
பின்னே நாம் அழிவோம்
ஆண்: நுரை
ஆண் குழு: சிறிது
ஆண்: கரை
ஆண் குழு: பெரிது
ஆண்: தடம்
ஆண் குழு: சிறிது
ஆண்: இடம் பெரிது
ஆண்: விழும்
ஆண் குழு: மனது
ஆண்: எழும்
ஆண் குழு: பொழுது
ஆண்: துயர்
ஆண் குழு: சிறிது
ஆண்: உயிர் பெரிது
பெண்: டிக் டிக் டிக்
உன் செவிகளில் சொட்டு சொட்டென
காலத் துளியா
டிக் டிக் டிக்
இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம்
கொட்டும் ஒலியா
பெண்: டிக் டிக் டிக்
—பின்னணி இசை—
ஆண்: அபாய ரூபங்கள் புவியை தாக்கினால்
ஆற்றலின் எல்லைகள் உடைத்து மீறுவோம்
அஞ்சாத உள்ளங்கள் ஒன்றாக கூடினால்
மரண பீதியை தாமதம் ஆக்குவோம்
ஆண்: எவ்வதின் நுதிக்கான நீயாற்றும் ஏதும்
எவ்வாறு இங்கே பிழை
பவ்வத்தின் துளி மொண்டு
மாகஞ்செய்யாது அவ்வானில் எங்கே மழை
ஆண் குழு: விதி சிறிது மதி பெரிது
தடை சிறிது விடை பெரிது ஏ
ஆண் குழு: வலி சிறிது வழி பெரிது
பொருள் சிறிது அருள் பெரிது
பெண்: டிக் டிக் டிக்
உன் செவிகளில் சொட்டு சொட்டென
காலத் துளியா
டிக் டிக் டிக்
இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம்
கொட்டும் ஒலியா
பெண்: டிக் டிக் டிக்
உன் செவிகளில் சொட்டு சொட்டென
காலத் துளியா
டிக் டிக் டிக்
இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம்
கொட்டும் ஒலியா
ஆண்: கடிகாரம் நாடி துடி துடிக்கும்
டிக் டிக் டிக்
நொடி இடிபோல் ஒலி வெடிக்கும்
டிக் டிக் டிக்
அவசரத்தில் கதை முடிப்போம்
டிக் டிக் டிக்
ஆண்: பிகாஸ் வென் வி டூ இட்
யூ நோ வி டூ இட் குயிக் அண்ட் ஸ்லீக்
நம் உடல் பயிற்சி
திரனின் வளர்ச்சி மனிதனின் புத்தி
கேன் காண்யூர் க்ராவிட்டி
ஆண்: நம்முள் வாழும் சக்தி
மாடர்ன் டெக்னாலஜி
கட்டுமே தன்னம்பிக்கை
நம் வெற்றிக்கான சங்கதி
பெண்: டிக் டிக் டிக்

