யம்மா யம்மா காதல்

Yamma Yamma Lyrics in Tamil
Song Name: Yamma Yamma
Movie: 7 Aum Arivu(ஏழாம் அறிவு)
Music: Harris Jayaraj
Singers: S. P. Balasubrahmanyam and Shweta Mohan
Lyricist: Kabilan(கபிலன்)
Year: 2011

Yamma Yamma Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா

ஆண்: அடி ஆணோட காதல் கைரேகை போல
பெண்ணோட காதல் கைகுட்டை போல
கனவுக்குள்ளே அவள வச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாளே
என் மூச்சுக்காத்த வாங்கி போனாளே

—பின்னணி இசை—

ஆண்: பொம்பளைய நம்பி
கெட்டு போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும்
இப்ப கடைசியில் நின்னேன்

ஆண்: முத்தெடுக்க போனால்
உன் மூச்சடங்கும் தன்னால்
காதல் முத்தெடுத்த பின்னால்
மனம் பித்தமாகும் பெண்ணால்

ஆண்: அவ கைய விட்டுதான் போயாச்சு
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணாய் போச்சு

ஆண்: காதல் பாதை கல்லு முள்ளுடா
அதை கடந்து போன ஆளே இல்லடா
காதல் ஒரு போதை மாத்திரை
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை

ஆண்: யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா

—பின்னணி இசை—

ஆண்: ஓட்ட போட்ட மூங்கில்
அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்ன பத்தி பாடும்

ஆண்: வந்து போனதாரு
ஒரு நந்தவன தேரு
நம்பி நொந்து போனேன் பாரு
அவ பூ இல்ல நாரு

ஆண்: என்ன திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்பு போல் நெருடாதே
மனம் தாங்காதே தாங்காதே

ஆண்: வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம்தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா

ஆண்: யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ள காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா

ஆண்: அடி ஆணோட காதல் கைரேகை போல
பெண்ணோட காதல் கைகுட்டை போல
கனவுக்குள்ளே அவள வச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாளே
என் மூச்சுக்காத்த வாங்கி போனாளே

—பின்னணி இசை—

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team