Mun Andhi Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: முன் அந்திச்சாரல் நீ
முன் ஜென்மத் தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில்
வரும் பாடல் நீ
ஆண்: பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ
ஆண்: ஹேஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தன்னால் உள்ளே உள்ளே
உருகுது நெஞ்சமே
ஆண்: வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தாய் இன்பம் சொல்ல
வார்த்தைகள் கொஞ்சமே
ஆண்: முன் அந்திச்சாரல் நீ
முன் ஜென்மத் தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில்
வரும் பாடல் நீ
ஆண்: பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ
—பின்னணி இசை—
ஆண்: ஓ அழகே ஓ இமை அழகே ஏ
கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓரழகே
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே
ஆண்: அடி உன்னைத் தீண்டத்தானே
மேகம் தாகம் கொண்டு மழையாய் தூவாதோ
வந்து உன்னைத் தொட்ட பின்னே
தாகம் தீர்ந்ததென்று கடலில் சேராதோ ஓஓ
ஆண்: ஹேஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தன்னால் உள்ளே உள்ளே
உருகுது நெஞ்சமே
ஆண்: ஓஹோ ஹோ வா வா பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தாய் இன்பம் சொல்ல
வார்த்தைகள் கொஞ்சமே
—பின்னணி இசை—
ஆண்: அதிகாலை ஓஹோ
அந்தி மாலை ம்ம்
உன்னை தேடி பார்க்கச் சொல்லிப் போராடும்
உனைக் கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்
ஆண்: பெண்ணே பம்பரத்தை போலே
என்னை சுற்ற வைத்தாய் எங்கும் நில்லாமல்
தினம் அந்தரத்தின் மேலே
என்னைத் தொங்க வைத்தாய் காதல் சொல்லாமல்
ஆண்: ஹேஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தன்னால் உள்ளே உள்ளே
உருகுது நெஞ்சமே
ஆண்: வா வா வா
ஆண்: வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தாய் இன்பம் சொல்ல
வார்த்தைகள் கொஞ்சமே
ஆண்: முன் அந்திச்சாரல் நீ
முன் ஜென்மத் தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில்
வரும் பாடல் நீ
ஆண்: பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ
—பின்னணி இசை—


