Innum Enna Thozha Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே
ஆண்: யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே
ஆண்: என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே
ஆண்: வந்தால் அலையாய் வருவோம்
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்
மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்
ஆண்: இன்னும் இன்னும் இறுக
உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக எழுக
ஆண்: இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே
—பின்னணி இசை—
ஆண்: மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்
தொடு வானம் இனி தொடும் தூரம்
பல கைகளை சேர்க்கலாம்
ஆண்: விதை விதைத்தால்
நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா
ஆண்: நம் தலைமுறைகள்
நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா
ஆண்: ஒரே மனம் ஒரே குணம்
ஒரே தடம் எதிர் காலத்தில்
அதே பலம் அதே திடம்
அகம் புறம் நம் தேகத்தில்
—பின்னணி இசை—
ஆண்: கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைக்கிறோம்
ஆண்: பனி மூட்டம் வந்து படிந்தென்ன
சுடும் பகலவன் மறையுமா
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா
ஆண்: இதோ இதோ இணைந்ததோ
இனம் இனம் நம் கையோடு
அதோ அதோ தெரிந்ததோ
இடம் இடம் நம் கண்ணோடு
—பின்னணி இசை—
ஆண்: யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே
ஆண்: என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே
ஆண்: வந்தால் அலையாய் வருவோம்
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்
மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்
ஆண்: இன்னும் இன்னும் இறுக
உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக எழுக


