Yellae Lama Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: ஏலே லாமா ஏலே ஏலமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா
ஆண்: என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க
ஆண்: ஏலே லாமா
பெண்: ஏலே ஏலமா
ஆண்: சொல்லாமலே
பெண்: உள்ளம் துள்ளுமா
ஆண்: நெஞ்சோரமா
பெண்: நெஞ்சின் ஓரமா
ஆண்: வந்தாலம்மா
பெண்: வெள்ளம் அள்ளுமா
பெண்: என் ஜன்னல் கதவிலே
இவன் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவி அது குதிக்க
—பின்னணி இசை—
ஆண்: அடி நியூட்டன் ஆப்பிள் விழ
புவி ஈர்ப்பை கண்டானடி
இன்று நானும் உன்னில் விழ
விழி ஈர்ப்பை கண்டேனடி
பெண்: ஓசை கேட்காமலே
இசை அமைத்தான் பீதோவனே
நீ என்னை கேட்காமலே
என்னை காதல் செய் நண்பனே
ஆண்: உத்துமதிப்பாய் என்னை பார்த்தவளும் நீதானே
குப்பைகூடை போல் நெஞ்ச கலைச்சவ நீதானே
மேலும் மேலும் அழகாய் மாறி போனேன் நானே
ஆண்: ஏலே லாமா ஏலே ஏலமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
பெண்: நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா
ஆண்: என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
பெண்: ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
ஆண்: என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க
—பின்னணி இசை—
பெண்: சிறு நேரம் இல்லாமலே
துளி நீரும் இல்லாமலே
இள வெயிலும் படாமலே
பூ பூக்கும் இன்பம் தந்தாய்
ஆண்: தோளில் விழாமலே
கை சிறிதும் படாமலே
உன் நிழலும் தொடாமலே
நீ என்னை கொள்ளை இட்டாய்
பெண்: இருவரும் மட்டும் வாழ
பூமி ஒன்று செய்வோமா
இரவொன்றே போதும் என்று
பகலிடம் சொல்வோமா
ஆண்: வேறு வேலை ஏதும் இன்றி
காதல் செய்வோம் வா வா
பெண்: ஏலே லாமா
ஆண்: ஏலே ஏலமா
பெண்: சொல்லாமலே
ஆண்: உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா
ஆண்: என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க
—பின்னணி இசை—



