விழியே விழியே பாடல் வரிகள்

Vizhiyae Vizhiyae Lyrics in Tamil
Song Name: Vizhiyae Vizhiyae
Movie: Idhu Kathirvelan Kadhal(இது கதிர்வேலன் காதல்)
Music: Harris Jayaraj
Singer: Aalap Raju
Lyricist: Thamarai(தாமரை)
Year: 2014

Vizhiyae Vizhiyae Lyrics in Tamil

ஆண்: விழியே விழியே திரை விரிகிறதே
உன்னை பார்த்திடும் வேளையிலே
அதிலே அதிலே படம் வரைகிறதே
மனம் சேர்ந்திடும் ஆசைகளே

ஆண்: கதிரவனாக திரிந்த பகல்
நிலவென தேயவும் துணிந்ததடி
கருநிறமாக இருந்த நிழல்
உனதொரு பார்வையில் வெளுத்ததடி

ஆண்: அன்பே உன்னை பார்ப்பதும் அனுபவமே
உன்னால் உயிர் போவதும் சுகம் சுகமே
அன்பே உன்னை பார்ப்பதும் அனுபவமே
உன்னால் உயிர் போவதும் சுகம் சுகமே

ஆண்: விழியே விழியே திரை விரிகிறதே
உன்னை பார்த்திடும் வேளையிலே
அதிலே அதிலே படம் வரைகிறதே
மனம் சேர்ந்திடும் ஆசைகளே

ஆண்: எதை நீ சொன்னாலும் வியப்பேன்
உன் அழகை கை ஏந்தி ரசிப்பேன்

ஆண்: எதை நீ சொன்னாலும் வியப்பேன்
உன் அழகை கை ஏந்தி ரசிப்பேன்

ஆண்: அடம் நீ செய்தாலும் பொறுப்பேன்
உன் குரலை செல்போனில் பதித்தேன்
பொழுதும் உன்னோடு இருப்பேன்
உன் சிாிப்பில் சோம்பல்கள் முறிப்பேன்

ஆண்: எதை நீ சொன்னாலும் வியப்பேன்
உன் அழகைக் கை ஏந்தி ரசிப்பேன்

ஆண்: இலையும் தீண்டாத கனி நீ
நான் சுவைக்கும் நாள் கிட்டும் பொறு நீ
விரல்கள் மீட்டாத இசை நீ
மெல்லிசையாய் என் காதல் வசம் நீ

ஆண்: தவமே செய்யாத வரம் நீ
பெண் கடலே முத்தங்கள் இடு நீ
இலையும் தீண்டாத கனி நீ
நான் சுவைக்கும் நாள் கிட்டும் பொறு நீ

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team