Anbae Anbae Ellam Anbae Lyrics in Tamil
ஆண்: அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
ஆண்: மழை காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
ஆண்: ஓஹோ அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
ஆண்: மழை காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
பெண்: என் மேஜை மீது பூங்கொத்தை
என் மேஜை மீது பூங்கொத்தை
வைத்தது நீதானே
பெண்: நான் வானம் பார்க்க
வழி செய்த சாதனம் நீதானே
என் இதயம் மெல்ல சிதையில் தள்ள
நீ தானே நிலவைக் காட்டித் தேற்றினாய்
ஆண்: அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
ஆண்: மழை காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
பெண்: தூக்கம் கண்ணில் வரவில்லை
சொப்பனம் காண வழி இல்லை
எங்கோ பாடல் கேட்டாலும்
நெஞ்சில் முன் போல் தீ இல்லை
பெண்: தூக்கம் கண்ணில் வரவில்லை
சொப்பனம் காண வழி இல்லை
எங்கோ பாடல் கேட்டாலும்
நெஞ்சில் முன் போல் தீ இல்லை
ஆண்: மலை தரும் காா் முகிலே
நீ மிதந்திடும் மயில் இறகே
இதம் தரும் இன்னிசையே
நீ ஒலி தரும் இன்னிசையே
பெண்: இருப்பது ஓர் உயிரே
அது உருகியே கரைகிறதே
நினைவுகள் கொல்வதனால்
மனம் மறுபடி சருகிறதே
ஆண்: ஓ அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
ஆண்: மழை காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
ஆண்: உன்னைப் பார்க்க கூடாது
என கண்ணை மூடிக் கொண்டாலும்
கண்ணை பிரித்து நீ வந்தாய்
இமைகளின் இடையில் நீ நின்றாய்
பெண்: உன்னிடம் சொல்வதற்கு
என் கதை பல காத்திருக்கு
இரு கண்களின் தந்திகளால்
அதை கடத்திட சொல் எதற்கு
ஆண்: உடைகளின் நோ்த்தியினால்
இந்த உலகினை வென்றவள் நீ
சிறு உதட்டினில் புன்னகையால்
என் இதயத்தில் நின்றவள் நீ
பெண்: ஓ அன்பே அன்பே எல்லாம் அன்பே



