Vizhigalil Oru Vaanavil Lyrics in Tamil
பெண்: விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்
பெண்: உன்னிடம் பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
என் தாய்முகம் அன்பே
பெண்: உன்னிடம் தோற்கிறேன்
நான் தோற்கிறேன்
என்னாகுமோ இங்கே
பெண்: முதன் முதலாய் மயங்குகிறேன்
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன்பு என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா
பெண்: விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்
பெண்: நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே
நாளையே நீ போகலாம்
என் ஞாபகம் நீ ஆகலாம்
பெண்: தேர் சென்ற பின்னாலே
வீதி என்னாகுமோ
பெண்: யார் இவன் யார் இவன்
ஓா் மாயவன் மெய்யானவன் அன்பில்
யார் இவன் யார் இவன்
நான் நேசிக்கும் கண்ணீா் இவன் நெஞ்சில்
பெண்: இனம் புரியா உறவிதுவோ
என் தீவில் பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது
மனம் எங்கும் மனம்
பெண்: விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்
பெண்: நான் உனக்காக பேசினேன்
யார் எனக்காக பேசுவார்
மௌனமாய் நான் பேசினேன்
கைகளில் மை பூசினேன்
நீ வந்த கனவெங்கே
காற்றில் கை வீசினேன்
பெண்: அன்பெனும் தூண்டிலை நீ வீசினாய்
மீன் ஆகிறேன் அன்பே
உன் முன்பு தானடா
இப்போது நான்
பெண்ணாகிறேன் இங்கே
பெண்: தயக்கங்களால் திணறுகிறேன்
நில்லென்று சொன்ன போதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி


