ஆரிரோ ஆராரிரோ

Aariro Aarariro Lyrics in Tamil
Movie: Deiva Thirumagal(தெய்வத்திருமகள்)
Music: G. V. Prakash Kumar
Singer: Haricharan
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)

Aariro Aarariro Lyrics in Tamil

ஆண்: ஆரிரோ ஆராரிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே
இவள் மழலையின் மொழி கேட்டு

ஆண்: ஓஓ தாயாக தந்தை மாறும்
புதுக் காவியம்
ஓஓ இவன் வரைந்த கிறுக்கலில்
இவளோ உயிரோவியம்

ஆண்: இரு உயிர் ஒன்று சோ்ந்து
இங்கு ஓா் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்ற போதும்
சுமந்திடத் தோணுதே
விழியோரம் ஈரம் வந்து
குடை கேட்குதே

ஆண்: ஆரிரோ ஆராரிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே
இவள் மழலையின் மொழி கேட்டு

ஆண்: முன்னும் ஒரு சொந்தம் வந்து
மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன
மரம் தூறுதே

ஆண்: வயதால் வளா்ந்தும்
இவன் பிள்ளையே
பிள்ளைப் போல் இருந்தும்
இவள் அன்னையே
இது போல் ஆனந்தம் வேறில்லையே

ஆண்: இரு மனம் ஒன்று சோ்ந்து
இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும் என்று
ஓா் குரல் கேட்குதே
விழியோரம் ஈரம் வந்து
குடை கேட்குதே

ஆண்: ஆரிரோ ஆராரிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே
இவள் மழலையின் மொழி கேட்டு

ஆண்: கண்ணாடிக்கு பிம்பம் அதை
இவள் காட்டினாள்
கேட்காத ஓா் பாடல் அதில்
இசை மீட்டினாள்

ஆண்: அடடா தெய்வம் இங்கே
வரம் ஆனதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே

ஆண்: கடவுளை பார்த்ததில்லை
இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன்பு இன்று
உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து
குடை கேட்குதே

ஆண்: ஆரிரோ ஆராரிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே
இவள் மழலையின் மொழி கேட்டு

Youtube video
Lyrics Added by Padalvarigal Team