விளம்பர இடைவெளி

Vilambara Idaiveli Lyrics in Tamil
Movie: Imaikkaa Nodigal(இமைக்கா நொடிகள்)
Music: Hiphop Tamizha
Singers: Christopher Stanley, Sudarshan Ashok, Srinisha Jayaseelan, Hiphop Tamizha
Lyricist: Kabilan Vairamuthu(கபிலன் வைரமுத்து)

Vilambara Idaiveli Lyrics in Tamil

ஆண்: ஒளி இல்லா உன் மொழிகள்
விடை தேடும் என் விழிகள்
இமைக்காத நம் நொடிகள்
கடிகார தேன் துளிகள்

ஆண்: அடி வாயார உன் காதல் நீ சொல்லடி
வாராத நடிப்பெல்லாம் வேண்டாமடி
மின்னஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பாதடி
கண் முன்னே உந்தன் எண்ணம் கூறடி

ஆண்: விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கின்ற வேளையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை உந்தன் மனதில்

ஆண்: நான் உனதே அடி நீ எனதா
தெரியாமல் நானும் தேய்கிறேன்
இல்லை என்றே சொன்னால் இன்றே
என் மோகப் பார்வை மூடுவேன்

பெண்: காதல் பூவை நான் ஏற்று கொண்டால்
உன் காத்திருப்பு நிறைவாகுமே
காத்திருப்பு அது தீர்ந்து விட்டால்
நம் கால் தடங்கள் அவை திசை மாறுமே

பெண்: இவளின் கனவோ உள்ளே ஒளியும்
இரவும் பகலும் இதயம் வழியும்
வழியும் கனவு இதழை அடையும்
எந்த காட்சியில் அது வார்த்தை ஆகிடும்

ஆண்: விளம்பர இடைவெளி மாலையில்
மாலையில்
உன் திருமுகம் திறக்கின்ற வேளையில்
வேளையில்

ஆண்: என் நிறமற்ற இதயத்தில் வானவில்
வானவில்
அடி என்ன நிலை உந்தன் மனதில்
உந்தன் மனதில்

பெண்: நிலமெல்லாம் உன் தடமே
நிலவெல்லாம் உன் படமே
நிஜமெல்லாம் உன் நிறமே
நினைவெல்லாம் உன் நயமே

பெண்: மதுரம் கொஞ்சும் இளைஞன் நீயோ
மதமே இல்லா இறைவன் நீயோ
வயத்தை கடிக்கும் குழந்தை நீயோ
வரம்பு மீறலோ எனைத் தொடரும் தூறலோ

ஆண் குழு: நான் உனதே அடி நீ எனதா
ஆண்: தெரியாமல் நான் தேய்யுறேன்
ஆண் குழு: இல்லை என்றே சொன்னால் இன்றே
ஆண்: என் மோகப் பார்வை மூடுவேன்

ஆண்: நான் உனதே அடி நீ எனதா
தெரியாமல் நான் தேய்யுறேன்
இல்லை என்றே சொன்னால் இன்றே
என் மோகப் பார்வை மூடுவேன்