Venpaniyae Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: வெண்பனியே முன்பணியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
ஆண்: உன் இருள் நேரங்கள்
உன் விழி ஈரங்கள்
தன்னாலே தேய்கிறதே
ஆண்: என் பனி காலங்கள்
பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிறதே
பெண்: வெண்பனியே முன்பணியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
பெண்: என் இருள் நேரங்கள்
என் விழி ஈரங்கள்
உன்னாலே தேய்கிறதே
பெண்: என் பனி காலங்கள்
பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிறதே
—பின்னணி இசை—
ஆண்: ஒரு இமை குளிர
ஒரு இமை வெளிர
உனக்குள்ளே உறங்கினேன்
ஆண்: ஒரு இதழ் மலர
மறு இதழ் உளற
உன்னை அதில் உணர்கிறேன்
பெண்: ஆதலால் பகல் மலர்ந்தது காதலால்
ஆய்தளால் இதழ் நனைந்தது தோய்தலால்
இணையும் இன்னும்
ஆண்: வெண்பனியே
முன்பணியே
என் தோளில் சாய்ந்திட வா
ஆண்: இன்றிரவே
நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
—பின்னணி இசை—
பெண்: இமைகளில் நனைந்தும்
இரு விழு நுழைந்தும்
இறங்கினாய் மனதுள்ளே
பெண்: முதல் நொடி மரணம்
மறு நொடி ஜனனம்
என்னகுள்ளே என்னகுள்ளே
ஆண்: எவ்வணம் அதில் இவளொரு செவ்வனம்
சோவெதம் அதில் அலைந்திட வா நிதம்
கணம் கணமே
பெண்: வெண்பனியே
முன்பணியே
என் தோளில் சாய்ந்திட வா
பெண்: இன்றிரவே
நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
ஆண்: உன் இருள் நேரங்கள்
உன் விழி ஈரங்கள்
தன்னாலே தேய்கிறதே
பெண்: என் பனி காலங்கள்
பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிறதே




