Gala Gala Gaala Gangu Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: கல கல காலா கேங்கு
பல பல பைலா சாங்கு
ஆண்: நித்தம் ஒரு கனவில் தூங்கு
உள்ளங்கையில் உலகை வாங்கு
ஆண்: கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்
வெப்பத்துக்கு காற்று நாங்கள்
மரமுக்கு மாற்று நாங்கள்
வேடன் இல்லா வேடந்தாங்கள்
பெண்: கல கல காலா கேங்கு
பல பல பைலா சாங்கு
ஆண்: நித்தம் ஒரு கனவில் தூங்கு
உள்ளங்கையில் உலகை வாங்கு
—பின்னணி இசை—
ஆண்: இது ஒரு வாலிப கோட்டை
மறந்திடு நீ வந்த வீட்டை
ஆண் குழு: நீ எனக்கு நான் உனக்கு
சேர்ந்திருந்தால் நாம் நமக்கு
ஆண்: இமைகளில் ஈரமே இல்லை
இதயத்தில் பாரமும் இல்லை
ஆண் குழு: பல் முளைத்த மின்னலை போல்
நாள் முழுதும் நாம் சிரிபோம்
ஆண்: இது போன்ற நாட்கள்தான்
உதிராத பூக்கள்தான்
ஆண் குழு: நாங்கள் நிலவும் கதிரும்
இணைந்த பொழுதாவோம்
ஆண்: கல கல காலா கேங்கு
பல பல பைலா சாங்கு
ஆண்: நித்தம் ஒரு கனவில் தூங்கு
உள்ளங்கையில் உலகை வாங்கு
—பின்னணி இசை—
ஆண்: போனது போச்சு விட்டு விளையாடு
வானத்த பாத்து தொட்டு விட ஓடு
ஆண் குழு: போனது போச்சு விட்டு விளையாடு
வானத்த பாத்து தொட்டு விட ஓடு ஓடு ஓடு
ஆண்: நதிகளும் தேங்குவதில்லை
அலை கடல் தூங்குவதில்லை
ஆண் குழு: வாழும் வரை விழித்திருந்தால்
உன் கனவை யார் பறிப்பார்
பெண்: ஹோ அதிகமாய் ஆசைகள் கொள்வோம்
விதிகளை வேர்வையில் வெல்வோம்
ஆண் குழு: வேற்றுமையின் வேரறுத்து
வானவில்லாய் சேர்ந்திருப்போம்
ஆண்: ஒன்று கூடி யோசித்தோம்
நம்மை நாமே நேசித்தோம்
ஆண் குழு: எங்கள் விழியில் இனிமேல்
உலகம் முகம் பார்க்கும்
ஆண்: கல கல காலா கேங்கு
பல பல பைலா சாங்கு
பெண்: நித்தம் ஒரு கனவில் தூங்கு
உள்ளங்கையில் உலகை வாங்கு
ஆண்: கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்
வெப்பத்துக்கு காற்று நாங்கள்
மரமுக்கு மாற்று நாங்கள்
வேடன் இல்லா வேடந்தாங்கள்
ஆண் குழு: கல கல
பெண்: காது வந்து கட்ஸ்
ஆண் குழு: பல பல
பெண்: ஏ பல பல
ஆண் குழு: கல கல
பெண்: ட்ராப் யூ சே
ஆண் குழு: பல பல
பெண்: பூம் பாஸ்தா
—பின்னணி இசை—




