என்னமோ ஏதோ

Ennamo Yedho Lyrics in Tamil
Song Name: Ennamo Yedho
Movie: Ko(கோ)
Music: Harris Jayaraj
Singers: Aalap Raju, Prashanthini, Sricharan and Emcee Jesz
Year: 2011

Ennamo Yedho Lyrics in Tamil

ஆண்: என்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்

ஆண்: என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

ஆண் குழு: ஏனோ
குவியமில்லா குவியமில்லா
ஒரு காட்சிப் பேழை
ஓஹோ உருவமில்லா
உருவமில்லா நாளை

ஆண்: ஏனோ
குவியமில்லா குவியமில்லா
ஒரு காட்சிப் பேழை
ஓஹோ அரைமனதாய்
விடியுது என் காலை

ஆண்: என்னமோ ஏதோ
மின்னி மறையுது விழியில்
அண்டி அகலுது வழியில்
சிந்திச் சிதறுது விழியில்

ஆண்: என்னமோ ஏதோ
சிக்கித் தவிக்குது மனதில்
றெக்கை விரிக்குது கனவில்
விட்டுப் பறக்குது தொலைவில்

ஆண் குழு: ஏனோ
குவியமில்லா குவியமில்லா
ஒரு காட்சிப் பேழை
ஓஹோ உருவமில்லா
உருவமில்லா நாளை

ஆண் குழு: ஏனோ
குவியமில்லா குவியமில்லா
ஒரு காட்சிப் பேழை
ஓஹோ அரைமனதாய்
விடியுது என் காலை

ஆண்: நீயும் நானும் எந்திரமா
யாரோ செய்யும் மந்திரமா பூவே

ஆண்: முத்தமிட்ட மூச்சுக் காற்று
பட்டு பட்டு கெட்டுப் போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது
திட்டமிட்டு எட்டிப் போனேன்

ஆண்: நெருங்காதே பெண்ணே
எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே
எந்தன் அச்சங்கள் அச்சாகும்
சிரிப்பால் எனை நீ
சிதைத்தாய் போதும்

ஆண்: ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்

ஆண்: என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

ஆண்: நீயும் நானும் எந்திரமா
யாரோ செய்யும் மந்திரமா பூவே

ஆண்: லெட்ஸ் கோ வாவ் வாவ்
எங்களின் தமிழச்சி
என்னமோ ஏதோ
யூ ஆர் லுக்கிங் சோ ப்லக்
மறக்க முடியலையே
என் மனமின்று

ஆண்: உன் மனசோ லவ்லி
இப்படியே இப்ப
உன்னருகில் நானும்
வந்து சேரவா என்று

ஆண் குழு: லேடி லுக்கிங்
லைக் எ சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா
நாட்டி லுக் விட்ட தென்றலா

ஆண்: லேடி லுக்கிங்
லைக் எ சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா
என்னை வட்டமிடும் வெண்ணிலா

ஆண் பெண் குழு: லேடி லுக்கிங்
லைக் எ சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா
நாட்டி லுக் விட்ட தென்றலா

ஆண் பெண் குழு: லேடி லுக்கிங்
லைக் எ சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா
என்னை வட்டமிடும் வெண்ணிலா

ஆண்: சுத்தி சுத்தி
உன்னைத் தேடி
விழிகள் அலையும்
அவசரம் ஏனோ

ஆண்: சத்த சத்த நெரிசலில்
உன் சொல்
செவிகள் அறியும்
அதிசயம் ஏனோ

ஆண்: கனாக்கானத் தானே பெண்ணே
கண்கொண்டு வந்தேனோ
வினாக்கான விடையும் காணக்
கண்ணீரும் கொண்டேனோ
நிழலைத் திருடும் மழலை நானோ

ஆண்: ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்

ஆண்: ஓஹோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

ஆண் பெண் குழு: ஏனோ குவியமில்லா குவியமில்லா
ஒரு காட்சிப் பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை

ஆண் பெண் குழு: ஏனோ
குவியமில்லா குவியமில்லா
ஒரு காட்சிப் பேழை
ஓஹோ அரைமனதாய்
விடியுது என் காலை

ஆண் பெண் குழு: ஏனோ
குவியமில்லா குவியமில்லா
ஒரு காட்சிப் பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை

ஆண் பெண் குழு: ஏனோ
குவியமில்லா குவியமில்லா
ஒரு காட்சிப் பேழை
ஓஹோ அரைமனதாய்
விடியுது என் காலை
ஏதோ

ஆண்: ஏதோ

 

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team