வீரபாண்டி கோட்டையிலே

Veerapandi Kotayyile Lyrics in Tamil
Song Name: Veerapandi Kotayyile
Singers: K. S. Chithra, Mano and Unni Menon
Year: 1993

Veerapandi Kotayyile Lyrics in Tamil

ஆண்: வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
ஊரும் ஆறும் தூங்கும் போது
பூவும் நிலவும் சாயும் போது
கொலுசு சத்தம் மனசை திருடியதே

ஆண்: வீரபாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனசை திருடியதே

ஆண்: வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
வளைவி சத்தம் இதயம் திருடியதே

பெண்: வீரபாண்டி கோட்டையிலே
வெள்ளி முளைக்கும் வேளையிலே
பருவப்பொண்ண திருடி தழுவ திட்டமிட்ட கள்வர்களே
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ

ஆண்: வைரங்கள் தாரேன்
வளமான தோளுக்கு
தங்க செருப்ப தாரேன்
கனி வாழை காலுக்கு

ஆண்: பவளங்கள் தாரேன்
பால் போன்ற பல்லுக்கு
முத்து சரங்கள் தாரேன்
முன் கோவச்சொல்லுக்கு

பெண்: உன் ஆசை எல்லாம்
வெறும் கானல் நீரு
நீ ஏழம் போட வேறாளப் பாரு

ஆண்: நீ சொல்லும் சொல்லுக்குள்ள
என் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள

ஆண்: வீரபாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனசை திருடியதே

ஆண்: வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
வளைவி சத்தம் இதயம் திருடியதே

பெண்: ரெட்டை சூரியன் வருகுதம்மா
ஒற்றை தாமரை கருகுதம்மா

பெண்: வாள்முனையில் ஒரு சுயவரமா
மங்கைக்குள் ஒரு பயம் வருமா

பெண்: ஒரு தமயந்தி நானம்மா
என் நல ராஜன் யாரம்மா

ஆண்: மணவாளன் இங்கே நானம்மா
மஹாராஜன் இங்கே நானம்மா

பெண்: இது மாலை மயக்கம்
என் மனதில் நடுக்கம்
நெஞ்சில் வார்த்தை துடிக்கும்
நீ ரெண்டில் ஒன்னு சொல்ல சொன்னா
ஊமைகிளி என்ன சொல்லும்

ஆண்: நீசொல்லும் சொல்லுக்குள்ள
என் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள

ஆண்: வீரபாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனசை திருடியதே

ஆண்: வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
வளைவி சத்தம் இதயம் திருடியதே

ஆண்: நீசொல்லும் சொல்லுக்குள்ள
என் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள

பெண்: வீரபாண்டி கோட்டையிலே
வெள்ளி முளைக்கும் வேளையிலே
பருவப்பொண்ண திருடி தழுவ திட்டமிட்ட கள்வர்களே
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ

ஆண்: வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
காடும் மழையும் தூங்கும்போது
கொலுசு சத்தம் மனசை திருடியதே

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team