Raasathi En Usuru Lyrics in Tamil
ஆண்: ராசாத்தி என் உசுரு என்னதில்ல
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: ராவோடு சேதி வரும் வாடிபுள்ள
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: ராசாத்தி என் உசுரு என்னதில்ல
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: கார வீட்டு திண்ணையில
கறிக்கு மஞ்சள் அரைக்கையில
குழு: மஞ்சள அரைக்கும் முன்ன
மனச அரச்சவளே
ஆண்: கரிசாக் காட்டு ஓடையிலே
கண்டாங்கி தொவைக்கயிலே
குழு: துணிய நனைய விட்டு
மனச புழிஞ்சவளே
ஆண்: அந்த களத்து மேட்டில் என்னை
இழுத்து முடிஞ்சிகிட்ட போறவளே
குழு: போரவ போரவதான்
போத்திக்கிட்டு போனவதான்
ஆண்: கல்யாண சேலையில
கண்ணீரை தொடச்சிகிட்டு போறவளே
குழு: போறவ போறவ தான்
பொஞ்சாதியா போனவதான்
ஆண்: நான் தந்த மல்லிகைய
நட்டாத்தில் போட்டு விட்டு
அரளிப் பூச்சூடி அழுதபடி போற புள்ள
குழு: கடலை காட்டுக்குள்ள
கையடுச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதனும்
பொம்பலைங்க சொன்ன சொல்ல
குழு: கடலை காட்டுக்குள்ள
கையடுச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதனும்
பொம்பலைங்க சொன்ன சொல்ல
ஆண்: ராசாத்தி என் உசுரு என்னதில்ல
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: ராவோடு சேதி வரும் வாடிபுள்ள
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: ராசாத்தி என் உசுரு என்னதில்ல
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: தொட்டு தொட்டு பொட்டு வச்ச
சுட்டு விரல் காயலியே
குழு: மறிக்கொழுந்து வச்ச கையில்
வாசம் இன்னும் போகலையே
ஆண்: மருதையில வாங்கித் தந்த
வளவி ஓடையலையே
குழு: மல்லு வேட்டி மத்தியில
மஞ்சக் கர மாறலையே
ஆண்: அந்தக் கழுத்து தேமலையும்
காதோர மச்சத்தையும் பாப்பதெப்போ
குழு: பாப்பதெப்போ பாப்பதெப்போ
பௌர்ணமியும் வாரதெப்போ
ஆண்: அந்தக் கொலுசு மணி சிரிப்பும்
கொமரி இளஞ் சிரிப்பும் கேட்பதெப்போ
குழு: கேட்பதெப்போ கேட்பதெப்போ
கீரதண்டும் பூப்பதெப்போ
ஆண்: கருவேலங் காட்டுக்குள்ள
கரிச்சான்குருவி ஒண்னு
சுதி மாறிக் கத்துதம்மா
துணையத்தான் காணோமின்னு
குழு: கடலை காட்டுக்குள்ள
கையடுச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதனும்
பொம்பலைங்க சொன்ன சொல்ல
குழு: கடலை காட்டுக்குள்ள
கையடுச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதனும்
பொம்பலைங்க சொன்ன சொல்ல
ஆண்: ராசாத்தி என் உசுரு என்னதில்ல
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: ராவோடு சேதி வரும் வாடிபுள்ள
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: ராசாத்தி என் உசுரு என்னதில்ல
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம்


