உசிலம்பட்டி பெண்குட்டி

Usilampatti Penkutti Lyrics in Tamil
Movie: Gentleman(ஜென்டில்மேன்)
Music: A. R. Rahman
Singers: Shahul Haamed and Swarnalatha
Lyricist: Vairamuthu(வைரமுத்து)

Usilampatti Penkutti Lyrics in Tamil

ஆண்: உசிலம்பட்டி பெண்குட்டி
முத்து பேச்சு
உன் ஒசரம் பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு

ஆண்: உசிலம்பட்டி பெண்குட்டி
முத்து பேச்சு
உன் ஒசரம் பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு

ஆண்: கூட மேல கூட வச்சு
குச்சனூரு போறவளே
மெதுவாக செல்லேன்டி

ஆண்: உன் கூடையில வெச்ச பூவு
கூடலூரில் வீசு தடி
குறி போட்டு வந்தேன்டி

ஆண் குழு: உசிலம்பட்டி பெண்குட்டி
முத்து பேச்சு
உன் ஒசரம் பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு

ஆண் குழு: உசுல உசுல உசிலம்பட்டி
உசுல உசுல உசிலம்பட்டி

ஆண்: கண்டமனூரு மைதாரேன்
கண்ணுல வச்சா ஆகாதா
பெண்: மைய வைக்கும் சாக்க வச்சு
கைய வைப்ப தெரியாதா

ஆண்: அலங்கா நல்லூர் ஜல்லிக் கட்டு
சேர்ந்து போனால் ஆகாதா
பெண்: மாடு புடிச்சி முடிச்ச கையில்
மயில புடிப்ப தெரியாதா

ஆண்: மயிலே மயிலே
ஆண் குழு: இறகொன்னு போடு
பெண்: வானம் விழுந்தா
பெண் குழு: அதுவும் போடும்

ஆண்: இறகு எதுக்கடி தோகையே கிடைக்கும்
அதுக்கும் காலம் வரும்

பெண்: உசிலம்பட்டி பெண்குட்டி
முத்து பேச்சு
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே
நான் புள்ள தாச்சி

பெண்: உசிலம்பட்டி பெண்குட்டி
முத்து பேச்சு
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே
நான் புள்ள தாச்சி

பெண்: கூட மேல கூட வச்சு
குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே

பெண்: கூடையில வச்ச பூவு
கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பாக்காதே

ஆண்: வெடலப் பொண்ணு நுனி நாக்கு
வெத்தலையாலே செவந்திருக்கு
பெண்: வேப்ப மரத்து கிளி மூக்கு
வெத்தல போட்டா செவந்திருக்கு

ஆண்: இடுப்பு சேல இடை வெளியில்
எனக்கு மட்டும் இடமிருக்கு
பெண்: ஆச பட்ட மாமனுக்கு
ஆண்டிப் பட்டி மடமிருக்கு

ஆண்: தணியும் தணியும்
ஆண் குழு: தானா தணியும்
பெண்: தடியால் அடிச்சா
பெண் குழு: கொடியா மலரும்

ஆண்: மனச சேலைக்குள் மறைப்பது ஒளிப்பது
அதுதான் பெண்ணின் குணம்

ஆண்: உசிலம்பட்டி பெண்குட்டி
முத்து பேச்சு
உன் ஒசரம் பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு

பெண்: உசிலம்பட்டி பெண்குட்டி
முத்து பேச்சு
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே
நான் புள்ள தாச்சி

பெண்: கூட மேல கூட வச்சு
குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே

பெண்: கூடையில வச்ச பூவு
கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பாக்காதே

Youtube video
Lyrics Added by Padalvarigal Team