என் வீட்டு தோட்டத்தில்

என் வீட்டு தோட்டத்தில் En Veetu Thotathil Lyrics in Tamil
Movie: Gentleman(ஜென்டில்மேன்)
Music: A. R. Rahman
Singers: S. P. Balasubrahmanyam and Sujatha Mohan
Lyricist: Vairamuthu(வைரமுத்து)

En Veetu Thotathil Lyrics in Tamil

பெண்: என் வீட்டு தோட்டத்தில்
பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி
எல்லாமே கேட்டுபார்

பெண்: என் வீட்டு தென்னங்கீற்றை
இப்போதே கேட்டுபார்
என் நெஞ்சை சொல்லுமே

பெண்: என் வீட்டு தோட்டத்தில்
பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி
எல்லாமே கேட்டுபார்

பெண்: என் வீட்டு தென்னங்கீற்றை
இப்போதே கேட்டுபார்
என் நெஞ்சை சொல்லுமே

ஆண்: வாய்பாட்டு பாடும் பெண்ணே
மெளனங்கள் கூடாது
வாய் பூட்டு சத்தம் எல்லாம்
பெண்ணுக்கு ஆகாது

பெண்: வண்டெல்லாம் சத்தம் போட்டால்
பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால்
வண்டுகே கேட்காது

ஆண்: ஆடிக்கு பின்னாலே காவேரி தாங்காது
பெண்: ஆளான பின்னாலே அல்லி பூ மூடாது
ஆண்: ஆசை துடிக்கின்றதோ

ஆண்: உன் வீட்டு தோட்டத்தில்
பூவெல்லாம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி
எல்லாமே கேட்டுபார்

ஆண்: உன் வீட்டு தென்னங்கீற்றை
ஒவ்வொன்றாய் கேட்டுபார்
என் பெயர் சொல்லுமே

ஆண்: உன் வீட்டு தோட்டத்தில்
பூவெல்லாம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி
எல்லாமே கேட்டுபார்

ஆண்: உன் வீட்டு தென்னங்கீற்றை
ஒவ்வொன்றாய் கேட்டுபார்
என் பெயர் சொல்லுமே

பெண்: சொல்லுக்கும் தெரியாமல்
சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போல
சொல்லாமல் நின்றேனே

ஆண்: சொல்லுக்கும் அர்த்ததுக்கும்
தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம்
சொர்க்கத்தில் சேராது

பெண்: எண்ணிக்கை தீர்ந்தாலும்
முத்தங்கள் தீராது

ஆண்:
எண்ணிக்கை பார்த்தாலே
முத்தங்கள் ஆகாது

பெண்:
ம்ம் அனுபவமோ

பெண்: என் வீட்டு தோட்டத்தில்
பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி
எல்லாமே கேட்டுபார்

பெண்: என் வீட்டு தென்னங்கீற்றை
இப்போதே கேட்டுபார்
என் நெஞ்சை சொல்லுமே

ஆண்: உன் வீட்டு தோட்டத்தில்
பூவெல்லாம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி
எல்லாமே கேட்டுபார்

ஆண்: உன் வீட்டு தென்னங்கீற்றை
ஒவ்வொன்றாய் கேட்டுபார்
என் பெயர் சொல்லுமே

Youtube video

Other Songs From Gentleman Album

Lyrics Added by Padalvarigal Team