Karisal Tharisal Lyrics in Tamil
ஆண்: கரிசல் தரிசல் நிலவு கொதிக்க
உசுர கடந்து மனசும் குதிக்க
வரவா ஊரும் அடங்க
பெண்: நாலு தெருவும் தொறந்து கெடக்க
நாயும் நரியும் முழிச்சு கெடக்க
முடியுமா என்ன நெருங்க
ஆண்: ஊரு மலை எல்லாம் கோலி விளையாடி
வருவேன் கோழி ஒறங்க
கண்ணுபடுமிண்டு காத்துரூவம் கொண்டு
வருவேன் நிலவு மயங்க
ஆண்: கரிசல் தரிசல் நிலவு கொதிக்க
வரவா ஊரும் அடங்க
பெண்: ஆஹான் ஆஹான் ஆகான்
ஆண்: ஏ மச்சக்கண்ணியே
பெண்: ஆஹான் ஆஹான் ஆகான்
ஆண்: ஏ மச்சக்கண்ணியே
பெண்: ன னா ன னா நானா
ஆண்: ஏ மச்சக்கண்ணியே ஏ மச்சக்கண்ணியே
பெண்: என் அடி வயித்தில்தான் புளி கரைக்க
வந்தேபுட்டான் என்ன கொன்னேபுட்டான்
என் அடி வயித்தில்தான் புளி கரைக்க
வந்தேபுட்டான் என்ன கொன்னேபுட்டான்
ஆண்: ஊரடஞ்சுருச்சு போர் தொடங்கிடுச்சு
எல்லா நெசம் இனி நீயே என் வசம்
நான் வரவா கண்ணே நான் வரவா
வாய்ப்பிருந்தால் வந்து வாய் தரவா
ஆண்: ஓட்டு கூரையில என்ன நடக்கிறதோ
கொடுக்கிற தெய்வம்தான் கூரை பிரிக்கிறதோ ஓ
கூரை பிரிச்சபடி மேல அழைக்கிறதோ ஓஹ்
ஆண்: நான் வரவா கண்ணே நான் வரவா
வாய்ப்பிருந்தால் வந்து வாய் தரவா
பெண்: ஓட்டு கூரையில என்ன நடக்கிறதோ
கொடுக்கிற தெய்வம் தான் கூரை பிரிக்கிறதோ
கூரை பிரிச்சபடி மேல அழைக்கிறதோ
ஆண்: மேல் காட்டு மூலையில மேகம் இல்ல மின்னலில்ல
பூமி நனைஞ்சிருச்சு
மேல் காட்டு மூலையில மேகம் இல்ல மின்னலில்ல
பூமி நனைஞ்சிருச்சு
ஆண்: பழம் நழுவி பாலில் விழுந்தாச்சு
அது நழுவி வாயில் விழுந்தாச்சு
பெண்: அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு
அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு
ஆண்: சுண்ணாம்பு கேட்கபோயி
சொக்க தங்கம் வாங்கி வந்தேன்
காலம் கனிஞ்சிருச்சு
ஆண்: சுண்ணாம்பு கேட்கபோயி
சொக்க தங்கம் வாங்கி வந்தேன்
காலம் கனிஞ்சிருச்சு
பெண்: அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு
அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு
