Pooparikka Neeyum Lyrics in Tamil
ஆண்: பூப்பறிக்க நீயும் போகாதே
உன்னப் பாத்தாலே
பூக்களுக்குள் கத்திச் சண்டையடி
குழு: தந்தானே தந்தானே
ஆண்: பொட்டு வைக்க நீயும் போகாதே
உன்னப் பாத்தாலே
கண்ணடி கைகள் நீட்டுமடி
குழு: தந்தானே தந்தானே
ஆண்: கோயிலுக்கு நீயும் போகாதே
கோபுரங்கள் சாஞ்சி பாக்குமடி
குழு: பாக்குமடி
ஆண்: காட்டுக்குள்ள நீயும் போகாதே
கொட்டுகிற தேனீக்கூட்டம்
தேனெடுக்க உதட்டை சுத்துமடி ஓஹோ
ஆண்: பூப்பறிக்க நீயும் போகாதே
உன்னப் பாத்தாலே
பூக்களுக்குள் கத்திச் சண்டையடி ஹோ
ஆண்: சூறாவளி போலப் போகிற
இந்த இளமைய
யாராச்சும் தடுக்க முடியுமா
ஆண்: சுத்திச் சுத்தி ஆட்டம் போடுற
இந்த வயசிடம்
யாராச்சும் நெருங்க முடியுமா ஹோ
பெண்: ஹேய் க க க ரி க ரி ச ச
ச நீ நீ ச க க க ரி க ரி ச ச ஆ ஆ ஆ
ஆண்: ம்ம்ம் ஆத்துக்குள்ள நீ குளிச்சா
அங்க உள்ள மீனு எல்லாம்
மீசையத்தான் சுத்திக்கிட்டு அலையுதடி
ஆண்: ஆட்டுக்குட்டி கூட இப்ப
தாடி ஒன்னு வச்சிக்கிட்டு
ஒரு தலைக் காதலுடன் திரியுதடி
ஆண்: குச்சுப்புடி கதக்களியெல்லாம்
உன் நடையிலே
புதுப் புது பாடம் படிக்குமே
ஆண்: ரங்கோலி கோலம் எதுக்கடி
கொஞ்சம் வெக்கப்படு
கன்னத்தில் வண்ணம் பிறக்குமே
ஆண்: நாடு விட்டு நாடு வரும்
வேடந்தாங்கல் வெள்ளைப் புறா
யார் மனதில் கூடு கட்ட வருகிறதோ
ஆண்: கால் முளச்ச சூரியனா
தூள் கெளப்பி சுத்துறியே
உன்னிடத்தில் எந்த நிலா ஒளி பெறுமோ
ஆண்: வட்டமிடும் பட்டாம்பூச்சியே
உன் வண்ணமெல்லாம்
ஒட்டிக்கொள்ள பூவும் பூத்திருக்கு
ஆண்: திட்டம் இல்ல
திசையும் இல்லையே
உன் வாலிபம்
பறந்திடத் தடையும் எங்கிருக்கு