Poi Varava Lyrics in Tamil
ஆண்: மெல்ல விடைகொடு விடைகொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
தாய் மண்ணே செல்கின்றோம்
தூரம் தூரம்
ஆண்: இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே
சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம்
தூரம் தூரம்
ஆண்: என்னை விட்டுச் செல்லும் உறவுகளே
உயிர் தெட்டுச் செல்லும் உணர்வுகளே
போய் வரவா
ஆண்: நண்பன் முகம் நெஞ்சில் நடந்து போகும்
காதல் தென்றல் கூட கடந்து போகும்
இப்பயணத்தில் பொன் நினைவுகள் நெஞ்சடைக்குமே
ஆண்: காடு மலை செல்ல துவங்கும் போதும்
நெஞ்சில் சொந்தங்களின் நினைவு மோதும்
கை குழந்தையை அணைக்கவே மெய் துடிக்குமே
ஆண்: ஆயிரம்
ஆண்: ஆயிரம்
ஆண்: என்ன அலைகள் அலைகள்
அலைகள் நெஞ்சோடு
ஆயினும்
ஆண்: ஞாபகம்
ஆண்: உயிர் துடிப்பாய் துடிக்கும்
எங்கள் மண்ணோடு
போய் வரவா
ஆண்குழு: போய் வரவா
ஆண்: எங்கே மகன் என்று எவரும் கேட்க
ராணுவத்தில் என தாயும் சொல்ல
அத்தருணம் போல்
பொற்பதக்கங்கள் கை கிடைக்குமா
ஆண்: நாட்டுக்கென்று தன்னை கொடுத்த வீரம்
ஆடை மட்டும் வந்து வீடு சேரும்
அப்பெருமை போல்
இவ்வுலகிலே வேறு இருக்குமா
ஆண்: தேசமே தேசமே
என் உயிரின் உயிரின் உயிரின் தவமாகும்
போரிலே காயமே
என் உடலின் உடலின் உடலின் வரமாகும்
போய் வரவா
ஆண்குழு: போய் வரவா
ஆண்: மெல்ல விடைகொடு விடைகொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
தாய் மண்ணே செல்கின்றோம்
தூரம் தூரம்
ஆண்: இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே
சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம்
தூரம் தூரம்
ஆண்: என்னை விட்டுச் செல்லும் உறவுகளே
உயிர் தெட்டுச் செல்லும் உணர்வுகளே
போய் வரவா
ஆண்குழு: போய் வரவா



