Neeye Sol Lyrics in Tamil
பெண்: நீயே சொல் உன் முத்தம் விழுந்தும்
மோகம் அடங்குமா
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும்
தீயும் அணையுமா
பெண்: நீயே சொல் உன் முத்தம் விழுந்தும்
மோகம் அடங்குமா
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும்
தீயும் அணையுமா
ஆண்: விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது
விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி தொலையாது
பெண்: பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது
காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது
ஆண்: ஹே நீயே சொல் என் முத்தம் விழுந்தும்
மோகம் அடங்குமா
நீயே சொல் என் எச்சில் விழுந்தும்
தீயும் அணையுமா
பெண்: போர்வைக்குள் பூ பூக்க வைக்க வா வா
வேர்வைக்குள் விவசாயம் செய்ய வா வா
ஆண்: மஞ்சத்தை பரிமாற வேண்டும் வா வா
மரியாதை தெரியாத முத்தம் தா தா
பெண்: கட்டில் மேல என்ன பண்பாடு
காதலால் காதல் வேர்கள் தொடு தொடு
ஆண்: நூறு முறை தொட்டு வைக்கிறேன்
நுனிநாக்கில் பொட்டு வைக்கிறேன்
உயிர் மட்டும் விட்டு வைக்கிறேன்
கண் தூங்காமல் விடிய வைக்கிறேன்
பெண்: அச்சத்தை விலக வைக்கிறாய்
வெட்கத்தை கரைய வைக்கிறாய்
ஆடைகளை நெகிழ வைக்கிறாய்
இனிமேல் எனை என் செய்குவாய்
ஆண்: நீயே சொல் என் முத்தம் விழுந்தும்
மோகம் அடங்குமா
நீயே சொல் என் எச்சில் விழுந்தும்
தீயும் அணையுமா
ஆண்: நீயே சொல் என் முத்தம் விழுந்தும்
மோகம் அடங்குமா
நீயே சொல் என் எச்சில் விழுந்தும்
தீயும் அணையுமா
ஆண்: உடலைப் போல் அழகான பண்டம் இல்லை
உதவாத பாகங்கள் இங்கு இல்லை
பெண்: வாயோடு வாய் வந்து கொஞ்சும் லீலை
வலியாலே இன்பங்கள் செய்யும் லீலை
ஆண்: மூங்கினில் பரவும் புயல் போல
உனதுடல் மீது உதடும் பரவுது
பெண்: இப்படியே உயிரும் இனிக்குமா
இவ்விதமே சொர்க்கம் கிடைக்குமா
இக்கணமே செத்து விடட்டுமா
உன் ஜீவன் அவள் வலி பொறுக்குமா
ஆண்: இது போலே சமயம் வாய்க்குமா
என் மடியில் இமயம் சரியுமா
என் உயிரில் மலைகள் உருகுமா
பூமி கடந்தெங்கும் போவோமா
பெண்: ஹே நீயே சொல் உன் முத்தம் விழுந்தும்
மோகம் அடங்குமா
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும்
தீயும் அணையுமா
பெண்: ஹே நீயே சொல் உன் முத்தம் விழுந்தும்
மோகம் அடங்குமா
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும்
தீயும் அணையுமா
ஆண்: விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது
விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி தொலையாது
பெண்: பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது
காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது
பெண்: ரத்தர என் முத்தம் விழுந்தும்
மோகம் அடங்குமா
நீயே சொல் என் எச்சில் விழுந்தும்
தீயும் அணையுமா

