மின்னல்கள் கூத்தாடும்

Minnalgal Koothadum Lyrics in Tamil
Music: G. V. Prakash Kumar
Singers: Karthik and Bombay Jayashri

Minnalgal Koothadum Lyrics in Tamil

ஆண்: மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்

ஆண்: உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
ஹையோ அது எனக்கு பிடித்ததடி

ஆண்: எடை குறைந்ததே
தூக்கம் தொலைந்ததே
ஹையோ பைத்தியமே பிடித்ததடி

ஆண்: முதல் முறை என் விரல்
பூக்கள் பறித்தது தோட்டத்திலே
தலையணை உறையில்
ஸ்வீட் ட்ரீம்ஸ் பலித்தது தூக்கத்திலே

ஆண்: காலை தேனீர் குழம்பாய்
மிதந்தது சோற்றுக்குள்ளே
கிறுக்கன் என்றொரு
பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே

பெண்: காதலி ஒரு வகை ஞாபக மறதி
கண்முன்னே நடப்பது மறந்திடுமே
வெளவாலைப் போல் நாமும் உலகம் மாறி
தலை கீழாக தொங்கிடுமே

பெண்: உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
ஹையோ அது எனக்கு பிடித்ததடா

ஆண்: எடை குறையதே
தூக்கம் தொலையதே
ஹையோ பைத்தியமே பிடிக்கிறதே

பெண்: என் பேர் கேட்டால்
உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே

பெண்: காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிரக்கத்திலே
ஓ குட்டி பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே

ஆண்: காதலும் ஒரு வகை போதை தானே
உள்ளுக்குள் வெறி ஏற்றும் பேய் போல
ஏன் இந்த தொல்லை என்று தள்ளி போனால்
புன்னகை செய்து கொஞ்சும் தாய் போல

பெண்: உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
ஹையோ அது எனக்கு பிடித்ததடா

பெண்: எடை குறைந்ததே
தூக்கம் தொலைந்ததே
ஹையோ பைத்தியமே பிடித்ததடா

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team