Kudagu Malai Lyrics in Tamil
ஆண்: குடகு மலை காற்றில் வரும்
பாட்டு கேக்குதா என் பைங்கிளி
குடகு மலை காற்றில் வரும்
பாட்டு கேக்குதா என் பைங்கிளி
ஆண்: ஏதோ நினைவுதான்
உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது
ஒத்த வழி என் வழிதானே மானே
ஆண்: குடகு மலை காற்றில் வரும்
பாட்டு கேக்குதா என் பைங்கிளி
ஆண்: மானே மயிலே மரகத குயிலே
தேனே நான் பாடும் தேமாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டாயோ என் வாக்கே
ஆண்: உன்ன எண்ணி நான்தான்
ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிக்கும்
தேர் போல ஆனேன்
ஆண்: பூ பூத்த சோலையிலே
பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே
ஆண்: நீர் பூத்த கண்ணு ரெண்டு
நீங்காத தாகம் கொண்டு பாடும் பாட்டு
பெண்: குடகு மலை காற்றில் ஒரு
பாட்டு பாடுது இந்த பைங்கிளி
குடகு மலை காற்றில் ஒரு
பாட்டு பாடுது இந்த பைங்கிளி
பெண்: மறந்தால்தானே நினைக்கனும் மாமா
நினைவே நீதானே நீதானே
மனசும் மனசும் இணைஞ்சது மாமா
நெனச்சு தவிச்சேனே நான்தானே
பெண்: சொல்லி விட்ட பாட்டு
தேக்கு காத்தோட கேட்டேன்
தூது விட்ட ராசா
மனம் தடுமாற மாட்டேன்
பெண்: ஊரென்ன சொன்னா என்ன
ஒன்னாக நின்னா என்ன
உன் பேரை பாடி நிப்பேன் மாமா
பெண்: தூங்காம உன்ன எண்ணி
துடிச்சாளே இந்த கன்னி
வா மாமா
ஆண்: குடகு மலை காற்றில் வரும்
பாட்டு கேக்குதா என் பைங்கிளி
பெண்: ஏதோ நினைவுதான்
உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது
ஆண்: ஒத்த வழி என் வழிதானே மானே
பெண்: குடகு மலை காற்றில்
ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி
ஆண்: குடகு மலை காற்றில் வரும்
பாட்டு கேக்குதா என் பைங்கிளி


