Mundhi Mundhi Vinayagane Lyrics in Tamil
ஆண்: முந்தி முந்தி விநாயகனே
முப்பது முக்கோடி தேவர்களே
முந்தி முந்தி விநாயகனே
முப்பது முக்கோடி தேவர்களே
ஆண்: வந்து வந்து எம்மை காரும்மையா
வந்து வந்து எம்மை காரும்மையா
வந்தனம் வந்தனம் தந்தோமையா
வந்தனம் வந்தனம் தந்தோமையா
பெண்: சக்தி உள்ள சிவ குருவே
நித்தம் கொடுத்தே வணக்கமையா
சக்தி உள்ள சிவ குருவே
நித்தம் கொடுத்தே வணக்கமையா
பெண்: பக்தியுடனே பதம் பணிந்தேன்
பக்தியுடனே பதம் பணிந்தேன்
நிச்சயம் வெற்றியே தாறுமையா
நிச்சயம் வெற்றியே தாறுமையா
ஆண்: வானத்துல சுத்துதடி ஒன்பது நவக்கிரகம்
பூமியிலே எடுத்து வந்தே தலையிலாத கரகம்
ஊரு உலகம் மெச்சிவரும் உத்தமபாளைய சரகம்
உள்ளமுள்ள ஜனங்க இந்த பட்டகேட்டு கேரங்கும்
பெண்: தேனி பெரியகுளம் தென் மதுரை ஜில்லா
வெள்ளி மெடலு பல வாங்கி வந்தே நல்லா
தேவி சரஸ்வதி பேர சொல்லி படுச்சேன்
தேசாதி தேசமெல்லா மேடை ஏறி ஜெயிச்சேன்
ஆண்: கோடை இடி முழக்கம் கொட்டு மேளம் கேட்டு
கூட ஒலிக்குதடி நானும் பாடும் பாட்டு
சோடை சோணக்கமில்லை மேடை ஏறும் காலு
வாடி பழக்கமில்லை வாலிபமான ஆளு
பெண்: என்ன எதிர்த்து நின்னு ஜெயிக்கும் ஆளு யாரு
பொன்னனான காலுக்கொரு பதில சொல்லிபாரு
பொண்ணெல்லாம் பூவு இந்த ஆம்பளைங்க யாரு
தன்ன மறந்து நின்னு தவிக்கும் வாழ நாறு




